Mr Local

Mr Local : சிவகார்த்திகேயனின் 13-வது படமான ராஜேஷ் இயக்கும் படத்திற்கு Mr. லோக்கல் தலைப்பு ஏன் என இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதிகா நடிக்கிறார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு Mr. லோக்கல் என பெயரிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேஷ் இப்படத்திற்கு Mr லோக்கல் டைட்டில் ஏன் என பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்த படத்திற்கு ஏகப்பட்ட தலைப்புகளை ஆலோசித்தோம்.

ஆனாலும் Mr லோக்கல் தான் சரியாக இருக்கும் என ஒட்டு மொத்த படக்குழுவினரும் முடிவு செய்து தான் தேர்ந்தெடுத்தோம்.

சிவகார்த்திகேயன் நடிப்பு திரையில் ஒரு பாசிட்டிவ் எனெர்ஜியை கொடுக்கும். நயன்தாராவின் நடிப்பு அற்புதம் . எங்களுக்கு ஞானவேல் ராஜா தான் தூண் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.