Mr Local Teaser

Mr. Local Teaser : சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க உள்ளது Mr. லோக்கல் படக்குழு.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சிவாவை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

கனா படம் பார்த்த சிம்புவின் ரியாக்ஷன் – இதை நீங்களே பாருங்க.!

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படமான Mr.லோக்கல் படக்குழுவும் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளது.

அதாவது இன்று காலை 11 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.