Mr Local

Mr. Local Songs : Mr. லோக்கல் படத்தின் அதிரடியான அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1-ம் தேதி Mr. லோக்கல் திரைப்படம் வெளியாக உள்ளது.

எம். ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். 24 Am ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிரடி அப்டேட்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆம் இப்படத்தின் பர்ஸ்ட் பாடல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற வகையில் படு மாஸாக கலக்கலு ரொம்ப லோக்கலு என்ற பெயரில் ஓப்பனிங் பாடல் உருவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இப்பாடல் எப்போது வெளியாகும் என்ற விவரங்களும் நாளை இணையத்தில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.