Mr Local Release Issue

Mr Local Release :

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ன் டாப் 10 பாடல்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

இந்நிலையில் தற்போது 17-ம் தேதியும் இப்படம் வெளியாவதில் சந்தேகம் தானாம். சிவகார்த்திகேயனின் கடைசி சில படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்த நிலையில் அவருக்கு 40 கோடி வரை கடன் ஏற்பட்டுள்ளதாம்.

அந்த கடனை எல்லாம் செட்டில் செய்தால் மட்டுமே மிஸ்டர் லோக்கல் திரைக்கு வருமாம்.

இதனால் என்ன செய்வதென்று சிவகார்த்திகேயன் முழிப்பதாகவும் மிஸ்டர் லோக்கல் மறுபடியும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் மற்ற பாடல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.