Mr. Local Movie Review : Mr Local Full Movie Review | Sivakarthikeyan | Nayanthara | Robo Shankar | Yogi Babu | Sathish | Mr Local HD Movie

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, சதீஷ், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் Mr. Local.

Mr. Local Movie Review : 

படத்தின் கதைக்களம் :

Mr. லோக்கலான மனோகரனின் (சிவகார்த்திகேயன்) அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையுடன் போட்டோ எடுக்க ஆசைப்படுகிறார்.

தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய அம்மாவை அழைத்து கொண்டு காரில் செல்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக நயன்தாரா சிவாவின் கார் மீது தன்னுடைய காரை மோதி விடுகிறார்.

அதன் பின்னர் இந்த மோதல் எப்படி காதலாகிறது? இந்த காதல் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

சிவகார்த்திகேயன் படம் இப்படித்தான் இருக்கும் – ஒப்பனாக சொன்ன பாண்டிராஜ்!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சிவகார்த்திகேயன், நயன்தாராவின் நடிப்பு வழக்கம் போல இந்த படத்திலும் சிறப்பாகவே அமைந்துள்ளது.

சதிஷ், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பலர் இருந்தும் காமெடி சொல்லி கொள்ளும் அளவு இல்லை. நம்மை ஓரளவிற்கு சிரிக்க வைக்கும் அளவிற்கு தான் காமெடி கை கொடுத்துள்ளது.

இசை :

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது. பாடல்களும் ரசிக்கும் அளவில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்கும் பிரமாதம்.

இயக்கம் :

எம் ராஜேஷ் படம் என்றாலே காமெடிக்கு கேரண்டி என நம்பலாம். இதுவரை அப்படி தான் இருந்து வந்தது. ஆனால் Mr. லோக்கல் திரைப்படத்தில் அதை கொஞ்சம் கோட்டை விட்டுள்ளார்.மற்றபடி படத்தின் காதல், மோதல், நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கிய விதம் ஆகியவை சிறப்பு.

தம்ப்ஸ் அப் :

1. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பு
2. பாடல்கள்
3. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. யோகி பாபு, சதிஷ், ரோபோ ஷங்கர் என பலர் இருந்தும் காமெடியில் கோட்டை விட்டது.

REVIEW OVERVIEW
ஜெயித்ததா Mr.லோக்கல்? - விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
mr-local-movie-review-2மொத்தத்தில் Mr. லோக்கல் கொஞ்சம் மைனஸ்கள் இருந்தாலும் சிவாவின் ரசிகர்களுக்கு நல்ல எண்டெர்டைன்மெண்ட்டாக இருக்கும்.