Mr Local Mems

Mr Local Mems : Mr. லோக்கல் படத்தின் டீசரை பார்த்து விட்டு இது இந்த படத்தின் ரீமேக் அந்த படத்தின் ரீமேக் என ஆளுக்கென பேசி வருகின்றனர்.

நடிகர் சிவகாரத்திகேயன், நயன்தாரா, சதிஷ் என பலர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் Mr. லோக்கல்.

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இப்படம் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் டீஸர் நேற்று சிவாவின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியானது.

இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் கலாய்ப்பவர்கள் வழக்கம் போல கலாய்க்க தொடங்கி விட்டனர்.

டீசரை பார்க்கும் போது அப்படியே ரஜினியும் விஜய சாந்தியும் சேர்ந்து நடித்த மன்னன் படத்தின் ரீமேக் போலவே இருப்பதாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Mr Local Mems

அதே போல் என் பேர் மனோகர் ஊர்ல எல்லாரும் Mr.லோக்கல் என கூப்பிடுவாங்க என கூறுவது NGK டீசரில் சூர்யா பேசிய வசனம் போல இருப்பதாகவும் கலாய்க்க தொடங்கி விட்டனர்.

Mr Local Mems

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.