Mr Local FL : Mr லோக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். இன்று தன்னுடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார்.

தொடர் வெற்றி.. ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத் – இப்போ இவ்வளவு சம்பளமாம்.!

இறுதியாக வெளியான சீமராஜா படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் Mr லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியாகி இருந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை நெட்டிசன்கள் விஜயின் ஜில்லா பட ஸ்டில்லுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

திருப்தியடையாத ஷங்கர், நிறுத்தப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங் – அதிர்ச்சி தகவல்கள்.!

இதோ பாருங்க அந்த புகைப்படம் :

Mr Local Troll Mr Local Troll

அதே சமயம் இந்த டைட்டிலும் தெலுங்கு பட காபி தான். ஏற்கனவே இந்த டைட்டிலும் தெலுங்குவில் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் வெளியாகி உள்ளது எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Mr Local

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.