YouTube video

MP Kanimozhi About Tamil New Year : 2008ஆம் ஆண்டு தை மாத முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதியை தமிழர் புத்தாண்டாக அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீண்டும் அதிமுக ஆட்சியமைத்தபோது, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழர் திருநாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சித்திரையில் இருந்து, மீண்டும் தை மாதம் முதல் நாளான சனவரி 14, மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என கனிமொழி தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14 தான் தமிழர் திருநாளாக இருக்க வேண்டும் என்ற தமிழறிஞர்களும், பல தரப்பு மக்களும் கோரிக்கை வைத்த நிலையில் மீண்டும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டாக அறிவித்து, மேலும் குழப்பத்தை ஏற்படுத்த, திமுக மீண்டும் தமிழ் புத்தாண்டு அரசியலை கையில் எடுத்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‌

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.