MP Jagathratchagan Case Details

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

MP Jagathratchagan Case Details : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமான இருந்த நிலங்கள் 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்பட்டன. இந்த நிலத்தை நீர் நிலையாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டது. ‌

இப்படியான நிலையில் 1996 ஆம் ஆண்டு எம்பி ஜெகத்ரட்சகன் அவர்கள் இந்த தொழிற்சாலையின் தலைவராக இருந்தபோது அரசுடமையாக்கப்பட்ட நிலத்திலிருந்து 1.55 ஏக்கர் நிலத்தை 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக பல்லாவரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் சார்ந்த ஆவணங்களை ஆய்வு செய்து சிலவற்றை நகல் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

சிபிசிஐடி போலீஸார் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.