MP Gautham Sigamani Issue
MP Gautham Sigamani Issue

எம்பி கவுதம சிகாமணியின் ரூபாய் 8.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

MP Gautham Sigamani Issue : தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்து வருவது திமுக.

தற்போது சட்டத்திற்குப் புறம்பான வழியில் வருவாய் ஈட்டியதாக திமுக எம்பி கௌதம சிகாமணி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதியின் திமுக எம்பியான இவர் ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இப்படியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இவர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததன் மூலமாக கிடைத்த வருவாய் ரூபாய் 7.05 கோடியை மழைத் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கவுதம சிகாமணிக்கு தமிழகத்தில் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் என அனைத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட ரூபாய் 8.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

திமுக எம்பி மீது அமலாக்கத் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.