Movie Title Rules
Movie Title Rules

படங்களுக்கு இனி இஷ்டத்துக்கு டைட்டில் வைக்க முடியாத நிலையை மத்திய அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Movie Title Rules : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் உருவாகும் படங்களுக்கு அவரவர் இஷ்டத்துக்கு டைட்டில் வைத்து வந்தனர், அதற்கெல்லாம் மத்திய அரசு செக் வைத்துள்ளது.

தமிழ் படங்களுக்கு தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு என அறிவிக்கப்பட்டிருந்த போது அனைத்து படங்களுக்கும் தமிழில் டைட்டில் வைக்கப்பட்டு வந்தது.

அந்த நிலை மாறியதும் அவரவர் அவர்களது இஷ்டத்துக்கு டைட்டில் வைக்க தொடங்கி விட்டனர், பெரும்பாலா டைட்டில்கள் வேறு மொழிகளை தழுவியும் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் இனி படங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் பிராந்திய மொழிகளில் மட்டும் தான் தலைப்பு வைக்க வேண்டும் என கூறியுள்ளது.

அந்தந்த மாநிலத்தின் மொழிகளில் தான் தலைப்பு வைக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்க தக்கது தான், ஆனால் இனி நம்முடைய இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது என்பதால் திரையுலகினர் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த உத்தரவுக்கு பிறகு சமூக ஆர்வலர்கள் அப்படியே டபுள் மீனிங் தலைப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.