விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளிமயில்”என்ற படத்திற்கான புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், அண்ணாதுரை, பிச்சைக்காரன் ,சைத்தான் போன்ற அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அந்த வகையில் விஜய் ஆண்டனி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் “வள்ளிமயில்”.

இந்த படத்தை நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, பாண்டிய நாடு போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்குகிறார். இதையடுத்து நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார். விஜய் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவோடு தயாராகிக் கொண்டிருக்கும் இப்படம் வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி பிரியா அப்துல்லாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த “வள்ளிமயில்” படத்தின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் போஸ்டர்  ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.