நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் கார்த்திக்கின் ‘விர்மன்’ திரைப்படத்தை வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபல இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் “கோப்ரா”. இதில் பல கெட்டப்பில் நடித்திருக்கும் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அண்மையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது.

"கோப்ரா" படத்தின் இடத்தைப் பிடிக்க இருக்கும் கார்த்தியின் "விருமன்" திரைப்படம் - வெளியான வைரல் தகவல்.

இப்படம் வருமா ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் பரவி இருந்த நிலையில் தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முழுமை அடையாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளி வைத்திருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.

"கோப்ரா" படத்தின் இடத்தைப் பிடிக்க இருக்கும் கார்த்தியின் "விருமன்" திரைப்படம் - வெளியான வைரல் தகவல்.

இந்நிலையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் உருவாகி இருக்கும் “விருமன்” திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் “கோப்ரா” படம் ரிலீஸ் தேதி மாறுபட்டால் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி விருமன் திரைப்படத்தை முன்பாகவே வெளியிட படகுழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரிகள் பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.