Mouna Ragam Serial 2

பாதியில் நின்று போன விஜய் டிவி சீரியல் மீண்டும் புதிய சீசன் ஆக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

Mouna Ragam Serial 2 : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருவது விஜய் டிவி. இத டிவி சேனலில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று மௌன ராகம்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த இந்த சீரியல் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் மீண்டும் பழைய சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கி வருகிறது விஜய் டிவி.

அந்த வரிசையில் பாதியில் நிறுத்தப்பட்ட மௌனராகம் சீரியல் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் எனவும் விஜய்டிவி தெரிவித்துள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.