Petta Viswasam
2019-ல் அதிகம் கொண்டாடப்பட்ட படம் எது? என்ற லிஸ்டை பிரபல தியேட்டர் ஒன்று வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியானால் வெளியாகும் அன்று கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும்.

குறிப்பாக சென்னையில் ரோகினி, வெற்றி என சில தியேட்டர்கள் கொண்டாட்டத்திற்கே பெயர் போன தியேட்டர்கள் எனலாம்.

தற்போது வெற்றி தியேட்டர் நிறுவனம் 2019-ல் அவர்களின் தியேட்டரில் அதிகம் கொண்டாட்டப்பட்ட படம் எது என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது.

லிஸ்டில் முதலிடத்தில் அஜித்தின் விஸ்வாசமோ, ரஜினியின் பேட்டையோ இடம் பெறவில்லை. தளபதி விஜயின் பிகில் தான் இடம் பெற்றுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் ரி-ட்வீட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.