Mosquito Control:
Mosquito Control:

Mosquito Control : இயற்கை முறையில் கொசுவை விரட்ட வேண்டுமா? இதோ, சில டிப்ஸ்!.

🦟 கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து வீட்டில் ஸ்ப்ரே செய்து கொசுவை விரட்டலாம்.

🦟 எலுமிச்சை பழம் ஒன்றை இரண்டாக அறுத்து 8 அல்லது 10 இலவங்க பூவை வைத்து, வீட்டின் நடு பகுதியில் வைத்தால் கொசுகள் வீட்டுக்குள் வராது.

விஷம் குடித்து விட்டார்களா? பதட்டப்படாதீர்கள்!! இதை கொடுத்தால் பிழைத்து விடுவார்கள்..

🦟 விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய் இரண்டையும் கலந்து வீட்டில் படுக்கை அறை, சமையல் அறையில் பஞ்சு திரியிட்டு எரிய விட்டால், கொசுகள் உள்ளே வராது.

🦟 புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

🦟 தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும்; கொசுவும் நெருங்காது.

🦟 ஒரு மண் சட்டியில் பச்சை வேப்பிலை அல்லது நொச்சி இலை புகைக்க விட்டு அதன் மேல் மஞ்சள் பொடியை தூவிவிட்டால் கொசு தொல்லை வராது.

🦟 வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.

🦟 யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.

🦟 பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது.

🦟 வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம்.

🦟 குறிப்பு;
ஆஸ்துமா நோயாளிகள் கொசுவை விரட்ட, புகை போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here