Morning Breakfast
Morning Breakfast

Morning Breakfast

☆ சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காலை உணவாக பிரட் மற்றும் ஜாமீனை கொடுப்பார்கள்.

பெற்றோர்கள் பிரெட் மற்றும் ஜாம் நல்ல ஆரோக்கியமான உணவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரட் மற்றும் ஜாம் குழந்தைகளின் உடலை எப்படி எல்லாம் பாதிக்கிறது . அவற்றில் உள்ள தீமைகளை இப்பொழுது பார்ப்போம்.

☆ மைதா மாவினை கொண்டு பிரட் செய்யப்படுகின்றது. மைதா குழந்தைகளின் ஜீரண சக்தியை குறைக்கும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இது அமையும்.

☆ ஜாம் மிகவும் சுவையாக இருப்பதற்காக அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுகின்றது.

☆ அரை ஸ்பூன் ஜாமில், இரண்டு ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு அதிக படியாக கலோரிகள் கொடுக்கப்படுகிறது.

☆ ஜாமில் எந்த ஊட்டசத்தும் இல்லை. மேலும் பழங்களை அதிக வெப்பத்தில் வேக வைத்துத்தான் ஜாம் தயாராக்கப்படுகிறது. இதனால் பழங்களில் இருக்கும் சத்துக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

☆ எனவே சமைக்க ஏதும் இல்லை என்பதாலோ , சோம்பலாக இருக்கிறது என்பதால் குழந்தைகளுக்கு பிரட் ஜாம் கொடுக்காதீர்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here