Mootu Vali Maruthuvam :
Mootu Vali Maruthuvam :

Mootu Vali Maruthuvam :

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே மூட்டுவலிக்கான மருத்துவ டிப்ஸ்:

மூட்டுவலி போக்கும் இயற்கை வைத்தியம் :-

▪முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும். துவையலாக உள்ளுக்கும் எடுத்துக் கொள்ளலாம்.

▪ வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

▪ சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து பூசி வர மூட்டு வீக்கம் குறையும்.

▪ நொச்சி இலைச் சாறை மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.

▪ நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.

▪ கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.

▪ புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.

▪ கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேனை கலந்து சாப்பிட்டு வர இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாகும்.

▪ முருங்கை இலையை விளக்கெண்ணையில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வர மூட்டு வலி,இடுப்பு வலி,வாதவலி குறையும்.

▪ மருதாணி இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here