தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தின் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவியின் கணவர் நந்தினியை கூப்பிட்டு உன்ன கூப்பிடுறனே காதுல விழலையா என்று கேட்க நீங்க கூப்பிடவே இல்லையே என்று நந்தினி சொல்லுகிறார். நான் கூப்பிடவே இல்லனாலும் கேட்கலையா வந்துடுறேன் என்று சொல்லணும், மாதவி உன்னை தேடிக்கிட்டு இருக்கா போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். கல்யாணத்தை கூப்பிட்டு சப்பாத்தி சுட்டு மேல சரஸ் கிட்ட கொடுத்து விடு என்று சொல்லிவிட்டு மேலே செல்லுகிறார். சரஸிடம் கோதுமை மாவு எங்கே இருக்கு என்று கல்யாணம் கேட்க மேலே என்று சொல்லுகிறார். எனக்கு எட்டாவது நீ வேணா தூக்கி விடுறியா என்று சொல்ல இதனை பார்த்த சிங்காரம் இது ஐயா கேட்டார்னா உங்க ரெண்டு பேரையும் வேலைய விட்டு தூக்கிட்டுவாரு என்று சொல்லுகிறார். எங்கள அனுப்பிட்டு நீயும், உன் பொண்ணும் இங்க நிரந்தரமா இருக்கலாம் பாக்கறீங்களா அது முடியாது என்று கல்யாணம் சொல்லுகிறார். மாவை எட்டி எடுக்க தெரியாமல் மாவு கீழே கொட்டி விடுகிறது. இதனால் சிங்காரம் மற்றும் கல்யாணம் இருவரும் மாவில் வழுக்கி விழுந்து விடுகின்றனர். சிங்காரம் குரல் கேட்டு நந்தினி ஓடி வர அவருக்கு அதிகமாக அடிபட்டு விடுகிறது.
உடனே அருணாச்சலம் அந்த இடத்திற்கு வந்து முதலில் சிங்காரத்தை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகுமாறு கல்யாணம் மற்றும் நந்தினி இடம் சொல்லுகிறார். அவர்கள் ஹாஸ்பிடலில் போயிட்டு வந்த பிறகு சிங்காரம் ஸ்டிக் வைத்து நடந்து வருகிறார். அதனால் அருணாச்சலம் அவருக்கு எந்த வேலையும் கொடுக்க வேணா ரெஸ்ட் எடுக்கட்டும் என்று கல்யாணத்திடம் சொல்லிவிடுகிறார்
அருணாச்சலம் சூர்யாவிடம் வந்து இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமா சூர்யா என்று கேட்கிறார். அதற்கு சூர்யா கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ என்று நீங்க தானே சொல்றீங்க அதனால தான் ஓகே சொன்னேன் இனிமே டார்ச்சர் பண்ண மாட்டீங்கல்ல என்று சொல்லுகிறார். அதற்கு அருணாச்சலம் உனக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னோட முழு சம்மதத்தோடு தான் நடக்கணும் என்று நான் விரும்புறேன் என்று சொல்ல அதற்கு சூர்யா கல்யாணங்கறது நான் ஆசைப்படனும் அத நீங்க நிறைவேற்றனும் அதுதான் உங்க கடமை. ஆனா அது முதல்ல நடக்கல. உங்க பொண்டாட்டிக்கு ஏத்த மாதிரி அந்தஸ்து கௌரவத்துக்காக பண்ற கல்யாணம் இது அது எப்படி எனக்கு புடிச்சி இருக்க முடியும் என்று சொல்லுகிறார். எனக்கு டபுள் ஓகே டாடி என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் அருணாச்சலம் காபி குடித்துக்கொண்டு கீழே பார்க்க நந்தினி கோலம் போட்டு கலர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கே வந்த சுந்தரவல்லி இடம் இந்த வீட்டில மூணு பொம்பளைங்க இருக்கீங்க ஆனா இன்னைக்கு தான் கோலம் போட்டு பார்க்கிறேன் என்று சொன்னவுடன் சுந்தரவல்லி கோபமாக சுரேகாவின் ரூமுக்கு சென்று அவரை தட்டி எழுப்புகிறார். நேத்து வந்த வேலைக்காரி இந்த வீட்ட அழகு படுத்துகிட்டு இருக்கா உனக்கு கோலம் போட தெரியுமா புள்ளியாவது வெக்க தெரியுமா இப்படி தூங்கிக்கிட்டு இருக்க இந்த போன் வேற என்று திட்டிவிட்டு கோபமாக சென்று விடுகிறார். உடனே மாதவி என்னாச்சு எதுக்கு அம்மா இப்படி கத்திட்டு போறாங்க என்று சுரேகாவிடம் கேட்க எல்லாத்துக்கும் காரணம் இவதான் என்று கோலம் போடும் நந்தினியை கூட்டிச் சென்று காட்டுகிறார்.
நந்தினியை மேலே கூப்பிடும் சுரேகா, வேலை இருக்கு வா என்று கூப்பிட்டு அவரின் துணி ஒன்றை கொடுத்து ஹைரன் செய்ய வைக்கிறார். ஆனால் நந்தினிக்கு ஹைரன் செய்ய தெரியாது என்று சொல்லியும் நான் சொல்லித் தரேன் என்று ஸ்விட்ச் ஆன் பண்ணி விட்டு விட்டு சென்று விடுகிறார்.
ரூமுக்கு சென்று மாதவிக்கு போன் போட்டு நீ அவளுக்கு வேற எதுனா வேலை கொடு என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே மாதவி கட்டில் மேல் மடித்து வைத்திருக்கும் துணிகளை கலைத்து போட்டு நந்தினியை கூப்பிட்டு இதை மடித்து வை என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி சின்னம்மா துணி ஹைரன் பண்ண சொன்னாங்க அது பண்ணிட்டு வந்து நான் பண்றேன் என்று சொல்ல நான் தான் முதல்ல சொன்ன இதை பண்ணு என்று சொல்லுகிறார்.
உடனே நந்தினி துனியை மடிக்க ஆரம்பிக்க சுரேகா ரூமில் இருந்து வெளியே வந்து துணியின் மீது ஹைரன் பாக்சை வைத்துவிட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் துணி கருகும் வாசம் வந்து சுரேகா நந்தினி மற்றும் மாதவியை கூப்பிடுகிறார் வந்து பார்த்தால் துணியில் ஓட்டை விழுந்து விடுகிறது. சுரேகா நந்தினி திட்டிக் கொண்டிருக்க நான் நிக்க வச்சுட்டு தான் போனேன் நான் இப்படி பண்ணல என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க என்று சுந்தரவல்லி வர இங்க பாருமா நீ எடுத்து கொடுத்த டிரஸ் எப்படி பண்ணிட்டா என்று சொல்ல நந்தினி நான் நிக்க வச்சுட்டு தான் போனேன் நான் டிரஸ் மேல வைக்கல என்று சொல்லுகிறார். அப்போ அவ பொய் சொல்றாளா என்று சுந்தரவல்லி கேட்கிறார். அது எனக்கு தெரியாது மா ஆனா நான் தப்பு பண்ணல என்று நந்தினி சொல்லுகிறார். உன்கிட்ட பேசறது தப்பு என்று சுந்தரவல்லி கோபத்துடன் கிளம்பி விடுகிறார். அருணாச்சலம் அந்த இடத்திற்கு வந்து உங்க வேலைய உங்களால செஞ்சிக்க முடியாத அடுத்தவங்கள வச்சு செஞ்சா இப்படித்தான் நடக்கும் என திட்டி அனுப்பி வைக்கிறார்.
நந்தினி நடந்த விஷயங்களை அவங்க அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருக்க கல்யாணம் இரண்டு பேருக்கும் காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். கல்யாணம் இது வெறும் டீசர் தாமா இன்னும் ட்ரெய்லர் மெயின் பிக்சர் எல்லாம் நிறைய இருக்கு. என்னலாம் தாயகட்ட மாதிரி உருட்டி விளையாடுவாங்க அக்கா தங்கச்சி இரண்டு பேரும். அதையும் மீறி நான் இங்கே இருக்கனா ஐயா ரொம்ப நல்லவரு சின்னவரு அதைவிட ரொம்ப ரொம்ப நல்லவரு என்று சொல்லுகிறார். அவர் கிளம்பிய பிறகு நந்தினி அவர் அப்பாவிடம் அப்பா உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன் சூர்யா சார் கல்யாணத்துக்கு நம்ம ஏதாவது பண்ணனும் என்று சொல்லுகிறார். அதற்கு சிங்காரம் அவங்க எங்க நம்ம எங்கம்மா நம்ம செய்யறத முதல்ல அவங்க ஏத்துப்பாங்களா? என்று கேட்க நந்தினி ஒரு ஐடியா சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் புடவையை பார்த்துக் கொண்டிருக்க நந்தினி சரஸிடம் அவ்வளவா நல்லா இல்ல அக்கா இந்த பொண்ணு சூர்யா சாருக்கு அவ்வளவு பொருத்தமான பொண்ணு எல்லாம் இவங்க இல்ல அக்கா என்று சொல்லுகிறார்.
நந்தினி அர்ச்சனாவின் மீது ஒரு புடவை வைத்து இந்த புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும் போட்டு பாருங்க என்று சொல்ல, சுந்தரவல்லி நந்தினியை அறைய, அதனை சூர்யா பார்த்து விடுகிறார். சூர்யாவிடம் அர்ச்சனா நீ செலக்ட் பண்ற புடவை எதுவா இருந்தாலும் நான் கட்டிப்பேன் என்று சொல்ல நந்தினி எடுத்து கொடுத்த புடவையை சூர்யா அர்ச்சனாவிடம் கொடுக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாக நிற்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.