தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மினிஸ்டர் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருக்க மினிஸ்டரின் மனைவி இந்த கல்யாணம் நடக்கணுமா என்று கேட்கிறார். இதனைக் கேட்டு அர்ச்சனா அம்மா இதையே தான் பேசிட்டு இருக்காங்க பா என்று பாதி சாப்பாட்டிலேயே கை கழுவி விட்டு எழுந்து சென்று விடுகிறார். பிறகு மினிஸ்டர் என் பொண்ணுக்காக நான் எவ்வளவோ செலவு பண்ணிட்டேன் ஆனா இன்னைக்கு மொத்தமா ஒரு மாணிக்கமா எனக்கு திரும்ப கிடைக்கப் போகுது என்று பெருமையாக பேசுகிறார்.
மறுபக்கம் நந்தினி அப்பாவுடன் கல்யாணத்திற்கு தேங்காய், வாழைப்பழம் மற்றும் மூட்டை முடிச்சுடன் ரெடி பண்ணி எடுத்து வைக்கிறார். எத்தனை நாள்ல வருவக்கா என்று கேட்க மூணு நாள்ல வந்துடுவேன் என்று நந்தினி சொல்லுகிறார். உடனே அம்மாச்சி கல்யாணத்தை முடிச்சிட்டு சென்னைய சுத்தி பாப்பீங்கல்ல என்று சொல்ல அதற்கு நந்தினி. நீயும் வா உன்ன கல்யாணத்துல பாத்திரம் கழுவ விட்டுறேன் என்று சொல்ல அம்மாச்சி வேண்டாம் என தப்பித்து விடுகிறார்.
சூர்யாவின் வீட்டில் பந்தக்கால் ஏற்பாடுகள் விமர்சையாக ரெடி பண்ணிக் கொண்டிருக்க அருணாச்சலம் அனைவரையும் கூப்பிட மேலே வருகிறார். அனைவரும் கீழே இறங்கி வர சூர்யா எங்கே என்று மாதவியின் கணவரிடம் கேட்க கதவு சாத்தியிருக்கு என்று சொல்லுகிறார். ஆனால் உடனே சூர்யா ரெடி ஆகி கீழே வருகிறார். பிறகு சம்பிரதாயங்களை ஆரம்பிக்க அனைவரும் பொட்டு வைத்து சாமி கும்பிடுகின்றனர். சூர்யாவும் பொட்டு வைத்து சாமி கும்பிடுகிறார்.
உடனே மாதவியின் கணவர் இன்னும் மூணு நாள்தான் இருக்கு மூன்றாவது நாள் ரெண்டு பேரும் வலது கால் எடுத்து வச்சு உள்ள வந்துருவாங்க நம்ம ரெண்டு காலையும் வைத்து வெளியே போயிடனும் என்று மாதவியிடம் சொல்லுகிறார். அதற்கு மாதவி திட்டம் போட்டு பந்தக் காலை குழிக்குள் வைக்கும் போது நீங்க விட்டுடுங்க நான் தள்ளிவிட்டு விடுகிறேன் என்று பிளான் போடுகிறார். உடனே அதே மாதிரி குழியில் வைத்த உடன் மாதவி தள்ளிவிட பந்தக்கால் சாய்வதை பார்த்து அனைவரும் பதறுகின்றனர். சரியான நேரத்தில் வந்த நந்தினி பந்த காலை தாங்கி பிடித்து நிற்க வைத்து பூஜையை தொடங்குகி பந்தகால் நட்டு பூஜை செய்கின்றனர். அருணாச்சலம் நந்தினியை கூப்பிட்டு நவதானியத்தை போட்டு பூஜை பண்ணுமா என்று சொல்லுகிறார். நந்தினியும் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்.
பிறகு சுந்தரவல்லி வந்தவர்களிடம் உட்கார்ந்து நல்லபடியாக பந்த கால் முடிந்தது என்று பேசிக் கொண்டிருக்க, நந்தினி பேக் எடுத்துக்கொண்டு உள்ளே வருகிறார். சுந்தரவல்லி வேலை செய்பவரை கூப்பிட்டு இவர் தோட்டத்தில் வேலை பார்க்கிறவ கிட்சனில் ஒரு இடம் கொடுத்து தங்கவை என்று சொல்ல அவரும் சரி என்று நந்தினி கூட்டி செல்கிறார். பிறகு அவர் கூட இருக்கும் சரஸிடம் இந்த பாப்பா அப்ரண்டீஸ் எப்படி காபி போடணும் சமைக்கனும்னு சொல்லிக் கொடு என்று பில்டப் கொடுக்கிறார்.
அந்த நேரம் பார்த்து அங்க வந்து அருணாச்சலம் இந்த வீட்டில பந்தக்கால் நடுவோமா அப்படி என்ற ஏக்கம் ரொம்ப நாளா இருந்தது. ஆனா அது சரியும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனா நல்ல நேரம் பார்த்து நீ வந்து புடிச்சிட்டம்மா அந்த கருப்பனே உன்னை அனுப்பின மாதிரி இருந்தது என்று பேசிக் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே நீ ஊருக்கு போறதுக்குள்ள இவருக்கு காபி போடவும் சரசுக்கு சமைக்கவும் சொல்லிக் கொடு என்று சொன்னவுடன் நந்தினி சிரிக்கிறார்.
அருணாச்சலம் எங்க அம்மாவுக்கு அப்புறம் உன்னோட சமையல்தான் நான் ருசிச்சு சாப்பிட்டு இருக்கேன் மா என்று சொல்லிவிட்டு கல்யாணம் ஒழுங்கா காபி போட கத்துக்கோ என்று சொல்லிவிட்டு போகிறார். பிறகு நந்தினி அவர்களிடம் அம்மா எப்பவுமே கோவக்காரங்களா என்று கேட்க அம்மா ரொம்ப கோவக்காரவங்க தான் ஆனா அப்பா ரொம்ப பாசக்காரரு தம்பி இன்னும் நல்லவரு, ஆனா மாதவியும், சுரேகாவும் வெறி டேஞ்சரஸ் ஃபெல்லோ என்று கல்யாணம் சொல்லுகிறார். அதுக்கெல்லாம் நீ எதுவும் பயப்படாதம்மா எங்க கிச்சன்ல ரெஸ்ட் ரூம் இருக்கு நீங்க தங்கிகோங்க என்று சொல்ல. உடனே நந்தினி சரஸிடம் உங்க வீட்டுக்காரரா என்று கேட்க இல்லை இந்த வீட்டு வேலைக்காரர் என்று சொல்லுகிறார். இல்ல உங்க புருஷனா என்று கேட்டேன் அதற்கு கல்யாணம் அதுக்கு தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ஆனா வேலை நடக்க மாட்டேங்குது என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து மாதவியின் கணவர் என்ன டீம் ஃபார்ம் பண்றீங்களா? அடுத்து சம்பளம் ஏத்தி கேப்பீங்க ஸ்ட்ரைக் பண்ணுவீங்க இந்த வீட்டை வாங்கிடுவீங்க அப்படித்தானே என்று கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையா சும்மா பேசிகிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார். சரி என்ன பத்தியும் சொல்லு என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப இந்த ஆள் மட்டும் இந்த வீட்டுக்கு மருமகனா ஆகலனா எங்கள மாதிரி ஏதாவது ஒரு வீட்ல பாத்திரம் கழுவிட்டு இருந்திருப்பான் என்று சொல்லுகிறார். உடனே சரஸ் இவ்வளவு நேரம் டிராவல் பண்ணிக்கிட்டு வந்துருப்பாங்க சாப்பிடட்டும் என்று கூட்டி செல்கிறார்.
நந்தினி மற்றும் அவரது அப்பா வேலை பார்த்துக் கொண்டிருக்க மாதவியின் கணவர் வந்து உன்னை எத்தனை தடவை கூப்பிடுவது உனக்கு காதுல விழலையா என்று கேட்க நீங்க கூப்பிடவே இல்லையே என்று சொல்லுகிறார். நான் கூப்பிடல தான் ஆனா நான் சொல்லும்போது சரிங்கய்யா வரேன் என்று சொல்லணும். உன்ன மாதவி ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கா உனக்கு நிறைய வேலை இருக்கு என்று மேலே அனுப்பி வைக்கிறார். இதனைப் பார்த்த நந்தினி என் அப்பா வருத்தப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினி துணியை ஹைரன் பண்ணி கொண்டு இருக்க சுரேகா மாதவியிடம் அவளை இன்னைக்கு விடவே கூடாது நான் ஒரு பிளான் வெச்சிருக்கேன் என்று சொல்லுகிறார்.
அருணாச்சலம் சூர்யாவிடம் உண்மையிலேயே இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் தானா என்று கேட்க நான் ஆசைப்பட்ட எல்லாத்தையும் பண்ண முடியாது டாடி என்று சொல்லுகிறார். துணி மேல இப்படித்தான் அயன் பாக்ஸ் வச்சிட்டு போவியா என்று சுந்தரவல்லி கேட்க, நான் நிமிர்த்தி தான் வச்சுட்டு போன என்று சொல்ல, என்ன தைரியமா பதில் பேசுற என்று சுந்தரவல்லி கேட்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.