தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது
நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சுதாகர் வீட்டில் பத்திரிக்கை கொடுத்துவிட்டு பங்காளிகள் அனைவருக்கும் சூர்யாவின் கல்யாண பத்திரிக்கையை வைத்துவிட்டு நந்தினியை குடும்பத்துடன் இரண்டு நாளுக்கு முன்னாடியே வந்துடுங்க நிறைய வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அர்ச்சனா சூர்யாவை பாரில் சந்தித்து பேசுகிறார். இந்த திருமணம் வேண்டாம் என்றும் உன்னோட லைஃப் போயிடும் நான் இன்னைக்கு குடிக்காம பேசிக்கிட்டு இருக்க தயவுசெய்து புரிஞ்சுக்க என்று எவ்வளவு சொல்லியும் அர்ச்சனா ஒரு நாள் வாழ்ந்தாலும் உன் கூட தான் வாழ்வேன் மறுநாள் நீ டைவர்ஸ் செய்து கொடுத்தாலும் பரவாயில்லை என்று சொல்லுகிறார். கடுப்பாகி கோபப்பட்ட சூர்யா எழுந்து வெளியே வருகிறார் அர்ச்சனா இந்த கோபம் கூட உனக்கு அழகுதான் என்று சொல்லுகிறார்.
மாதவி கல்யாணத்தை நிறுத்த அர்ச்சனா குடிக்கும் வீடியோவை சூர்யாவிடம் காட்டினால் இந்த கல்யாணம் நிச்சயமாக நின்று விடும் என்று பிளான் போட்டு சூர்யாவிற்காக வாசலில் நின்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஃபுல் போதையில் சூர்யா வர அவரை நிறுத்தி அர்ச்சனாவின் வீடியோவை காட்டுகின்றன. ஆனால் அதை சுரேகா என்று நினைத்துக் கொண்டு உனக்கு எப்போ இந்த பழக்கம் வந்தது சியர்ஸ் என்று சொல்ல நல்லா பாரு நான் இல்ல நீ கல்யாணம் பண்ணிக்க போற அர்ச்சனா என்று சொல்லுகிறார்.
உடனே சூர்யா அதை ஏன் நான் இதுல பாக்கணும் அதுதான் எனக்கு எப்பவோ தெரியுமே, இப்ப கூட பார்ல குடிச்சிக்கிட்டு தான் இருந்தா அவளை பாத்துட்டு தான் வரேன் என்று சொல்ல மாதவி அதிர்ச்சியாகிறார். பிறகு நம்ம குடும்பத்துக்கு ஒரு மரியாதை இருக்கு, அங்க கோடீஸ்வரர்கள் மற்றும் ரொம்ப பணக்காரங்க எல்லாம் வருவாங்க நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு மரியாதையும் ஒழுக்கமும் இருக்க வேணாமா நீ கல்யாணத்தை நிறுத்திடு என்று மாதவி சொல்லுகிறார் இரண்டு நிமிடம் யோசித்த சூர்யா கல்யாணம் பண்ணிக்க அர்ச்சனா தான் என் பொண்டாட்டி என்று சொல்லிவிட்டு மேலே செல்ல மாதவி சுரேகா மற்றும் மாதவியின் கணவர் என மூவரும் அதிர்ச்சியாக இருக்கின்றனர்.
ஆனால் இதைக்கேட்ட சுந்தரவல்லி என் பையன் என்ன அழ வச்சு தான் பார்த்திருப்பான் இப்பதான் நான் சிரிக்கிறேன் இதுக்கு காரணம் மாதவிதான் என்று சொல்ல சுந்தரவல்லி மாதவிக்கு நன்றி சொல்லுகிறார். உங்க பையனோட கல்யாணத்தை நடத்தி உங்கள் கண்களை ஆனந்த கண்ணீரை பாக்கணும் அம்மா என்று மாதிரி சொல்ல மாதவியின் கணவர் ஆமா உங்க கண்ண ரத்தக்கண்ணீர் பாக்கணும் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி எனக்கு வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
ஆனால் சூர்யா சம்மதம் என்று சொன்னதால் சுரேகா இதுக்கு மேல கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று சொல்ல ,இல்ல கண்டிப்பா நான் நிறுத்துவேன் தாலி கட்டுற வரைக்கும் டைம் இருக்கு முயற்சி திருவினையாக்கும் கண்டிப்பா இந்த கல்யாணத்தை நான் நிறுத்திடுவேன் என்று கோபமாக பேசுகிறார்
அருணாச்சலத்திற்காக சுந்தரவல்லி வாசலில் காத்துக் கொண்டிருக்க அவர் வந்தவுடன் என்னை ரொம்ப நாளுக்கு அப்புறம் வெளியே இருந்து காத்துக்கிட்டு இருக்க என்று சொல்ல நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்தோஷமா இருக்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். என்ன விஷயம் என்று சொல்ல வாங்க முதல்ல வந்து பாருங்க வந்து உட்காருங்க என்று சொன்னால் என்ன விஷயம் என்று கேட்கிறார் நம்ம சூர்யாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாத நினைச்சோம் ஆனா அவனுக்கு இந்த கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டார் என்று சொல்லுகிறார். நான் நேர்ல கேட்ட என்று சொல்ல சூர்யாவின் அப்பா இருந்தாலும் மனசுல எதுவும் நெருடலாக இருக்கு என்று சொல்லுகிறார். பத்திரிக்கையை வச்சாச்சு இதுக்கு அப்புறம் எதுக்கு யோசனை எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் குடும்பத்துடன் பந்த கால் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்து சூர்யா பொட்டு வைத்து சாமி கும்பிடுகிறார். இன்னும் மூணு நாள் தான் இருக்கு என்று மாதவியின் கணவர் காதில் சொல்லுகிறார்.
சூர்யா உனக்கு வெறும் மருமகன் தான் ஆனால் எனக்கு என்று மினிஸ்டர் மனைவியிடம் பேசிக் கொள்கிறார். மாதவி மற்றும் அவரது கணவர் இருவரும் பிளான் பண்ணி பந்த காலை கீழே போட வந்த நேரம் பார்த்து எல்லோரும் பதறுகின்றனர். ஆனால் கீழே விழாமல் நந்தினி கையில் தாங்குகிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.