தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி மாமா வருவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் அவர் வர மாட்டார் பங்க்ஷன் ஆரம்பிச்சு விடலாம் என்று சொல்லியும் கேட்காமல் காத்துக் கொண்டிருக்கிறார் நந்தினி. அந்த நேரம் பார்த்து அவரது தாய் மாமா வர குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கம் வீட்டுக்கு தெரியாமல் நந்தினியின் அத்தையும் மகனும் வண்டியில் வந்து இறங்க இவரை பார்த்து அதிர்ச்சியாகி மறைந்து நின்று பார்க்கின்றனர்.
எல்லோரும் சென்று வாங்க மாமா என்று கூப்பிட அருவாளை தூக்கி நீட்டுகிறார். எல்லோரும் அதிர்ச்சியாகி நிற்க நந்தினி உள்ள வாங்க இல்லனா வெளியே போங்க, எங்கள அசிங்கப்படுத்துறதா நினைச்சுக்கிட்டு உங்கள நீங்களே அசிங்கப்படுத்திக்காதீங்க என்று சொல்லுகிறார்.
அதற்கு அவரின் தாய் மாமா நான் எந்த வீட்டு எச்ச சோறு சாப்பிடவும் வரல நீங்க ரெண்டு பேர் என்னை ஏமாத்திட்டு வந்து இருக்காங்க அவங்கள வெட்றதுக்காக தான் இங்க வந்திருக்கேன் என்று சொல்லுகிறார். இதையெல்லாம் மறைந்து இருந்து கேட்ட மகன் அம்மாவிடம் போன் வாங்கி உங்க மனைவிக்கு ஹார்ட் அட்டாக் என்று பொய் சொல்லி ஹாஸ்பிடலுக்கு வரவைத்து விடுகிறார்.
அவர் அப்படி கிளம்பிச் சென்றவுடன் இவர்கள் இருவரும் வந்து பங்க்ஷனில் கலந்து கொள்கின்றனர். இதனால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக சடங்கை தொடங்குகின்றனர்.
நல்லபடியாக சடங்க முடிய நந்தினியின் மாமா அவரின் மனைவிக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக சொல்லி ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கேன் என்று இவரும் ஏமாற்றுகிறார். இதையெல்லாம் பார்த்து எல்லோரும் சந்தோஷமாக சிரிக்கின்றனர்.
பிறகு பங்க்ஷன் நல்லபடியாக முடிந்த நிலையில் நடந்ததைப் பற்றி குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நகை சீட்டு கட்டி ஏமாதவர்கள் வீடு தேடி வந்து போலீஸ் ஸ்டேஷன் போவதற்கு நந்தினியை அழைக்கின்றனர்.
நந்தினி அவரது அப்பாவும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் போக அங்கு இருக்கும் போலீஸ் சரியாக பதில் சொல்லாததால் இருவரும் உள்ளே சென்று கேட்கின்றனர். அப்போது ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா என்று போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் நந்தினியின் அப்பாவை அடித்து விடுகின்றனர்.
இதனால் கோபமடைந்த நந்தினி, எதுக்கு இப்போ எங்க அப்பாவ அடிச்சீங்க, நியாயம் கேட்டு வந்த அடிப்பீங்களா? என்று கோபப்படுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் நகை கடைக்காரர் இங்கதான் இருக்கான் என்ற உண்மையை நந்தினிக்கு சொல்லுகிறார். உடனே நந்தினி ஒரு ஆட்டோவில் மைக்கில் எல்லோருக்கும் நகை கிடைக்கப்போகுது நகை கடை வாசலுக்கு வாங்க இன்று கூப்பிடுகிறார்.
மறுபக்கம் சூர்யா சாப்பிட்டானா என்று சூர்யாவின் அப்பா கேட்க எல்லோரும் அமைதியாக இருக்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று இன்றே எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.