தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நகை கடைக்காரர் ஏமாற்றியதை நினைத்து அம்மாச்சி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நந்தினிக்கு போன் வருகிறது. ரஞ்சிதாவின் பள்ளியில் இருந்து பேசுவதாகவும், உடனே வர சொல்லியும் சொல்கின்றனர்.
அங்கு சென்ற நந்தினி உன் தங்கச்சி லவ் லெட்டர் கொடுத்தா அதைக் கேட்டதுக்கு ரூம்ல போய் கதவை சாத்திட்டு அழுதுகிட்டே இருக்கா என்று சொல்ல நந்தினி அங்கு சென்று கதவை தட்ட ரஞ்சிதா அழுது கொண்டே திறக்கிறார். பிறகு நடந்ததை சொல்லி நந்தினியை கட்டிப்பிடித்து அழ எனக்கு அடி வயிறு ரொம்ப வலிக்குது அக்கா பயமா இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு ஒரு ஆசிரியர் வந்து பெரிய மனுஷி ஆகிருக்க என்று சொல்ல நந்தினி சந்தோஷப்படுகிறார்.
நந்தினி ரஞ்சிதாவை வீட்டுக்கு கூட்டி வர அனைவரும் சந்தோஷப்படுகின்றன. பிறகு தண்ணீர் ஊற்றி செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்கின்றனர். ரஞ்சிதா நந்தினி கூப்பிட்டு பாட்டி இனிமேல் ஆம்பள பசங்க கூட பேசக்கூடாது என்று சொல்லிச்சே ஏன் அக்கா, என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீ நீயாவே இரு என்று சொல்லுகிறார்.இது மட்டும் இல்லாமல் இதுக்கு முன்னாடி உன்னை தொடும் போது உனக்கு வித்தியாசம் தெரிஞ்சி இருக்காது ஆனா இனி தொடும் போது உனக்கு எல்லாமே தெரியும் .இது இயற்கை கொடுத்த அதிசயம் என்று அட்வைஸ் கொடுக்கிறார் இதை கேட்டு அம்மாச்சி சந்தோஷப்படுகிறார்.
சூர்யா பேக்டரிக்கு வர மேனேஜருடன் ஆபீஸ் ரூமுக்கு வருகிறார். அவருக்கு கையில் சிகரெட் கொடுத்து பிடிடா உன் என்று சொல்ல வேணாம் மச்சான் என்று சொல்கிறார். இவர்கள் இருவரும் ஒரே காலேஜில் படித்துள்ளனர். நீ மட்டும் ஒழுங்கா இருந்தா இந்த ஃபேக்டரி எப்படி இருக்கும் தெரியுமா நம்பர் 1 எடத்துல இருக்கும். அப்படியெல்லாம் கிடையாதுடா எல்லாம் எங்க அம்மாவுக்கு தான் பயப்படுவாங்க என்று சொல்ல அதற்கு அந்த மேனேஜர் நீ வந்தா சந்தோஷமா வேலை பாப்பாங்க ஆனா ஆன்ட்டி வந்தா வேல பாக்குற மாதிரி நடிப்பாங்க என்று கூறுகிறார். பிறகு சூர்யாவின் மாமா வந்து ஒரு இடத்துக்கு வெளியே போகணும் என்று சொல்லி கூட்டி செல்கிறார்.
மறுபக்கம் நந்தினியின் தோழி கணவர் குடித்துவிட்டு சண்டை போட அங்கு சென்று நந்தினி அவருக்கு சொல்லி புரிய வைக்கிறார். பிறகு நந்தினியின் தோழி அவரை கட்டிப்பிடித்து அழுகிறார் இத்துடன் என்று சீரியல் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் மாமாவிற்கு சொல்லணும் என்று சொல்ல, நான் சொல்றத மீறி போனீங்கன்னா அசிங்கப்பட்டு தான் வருவீங்க என்று சொல்ல, மாமாவிற்கு சொல்லாமல் எப்படி சடங்கு செய்ய முடியும் என்று கேட்கிறார் நந்தினி.
மறுபக்கம் சூர்யாவை பார்க்க வந்த பெண் வீட்டுக்காரர்களுக்கு போன் வர அதில் நீங்க மாப்பிள்ளை நேரா பாத்துட்டு பிடிச்சிருந்தா ஓகே சொல்லுங்க என்று சொல்ல சூர்யா மூன்று பெண்களுடன் ஃபுல் போதையில் வருகிறார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகி சென்று விடுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.