தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா ,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் நந்தினி மேகநாதன் என்பவருக்கு போன் போட்டு எதையோ பேசுகிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் முதலாளியிடம் உண்மையை சொல்லிவிடலாம் போலீஸ் கேஸ் எல்லாம் நமக்கு எதுக்கு முதலாளி கிட்ட சொன்னா புரிஞ்சுப்பாங்க என்று சொல்ல நந்தினி எதுவும் வேணாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து தேங்காய் வியாபாரி வருகிறார்.
நந்தினி இடம் நக்கலாக பேச காசு ரெடியா என்று கேட்க காசு இல்ல தேங்காய் தர வாங்க என்று கூப்பிடுகிறார். சைக்கிள் எடுத்த நந்தினி என் பின்னாடியே வாங்க தேங்காய் கொடுக்கிறேன் என்று வியாபாரியின் தோப்புக்கே கூட்டி செல்கிறார்.
நந்தினிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்று அறிந்து கொண்ட வியாபாரி வாயை திறக்காமல் அமைதியாக இருக்கிறார். பிறகு நந்தினி தேங்காய் வியாபாரியை பார்த்து நீ எல்லாம் பெரிய மனுஷனா இப்படித்தான் ஏமாத்திகிட்டு இருக்கியா என்று கோபமாக பேசி திட்டி விடுகிறார்.
உடனே சரி நான் பண்ணது தப்புதான் பேலன்ஸ் காசு கொடுத்துடறேன் என்று சொல்ல நீ இவ்ளோ பிராடு தனம் பண்ணியும் உன்கிட்ட பிசினஸ் பண்ணுவேன்னு எப்படி நினைக்கிற என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மேகநாதன் வருகிறார்.
அவர் கையில் இருந்த இரண்டு லட்சம் வாங்கி அதை இந்த தேங்காய் வியாபாரிடம் கொடுக்கிறார். பிறகு தேங்காய் வியாபாரி என் தோப்பிலேயே வந்து தேங்காய் எடுத்துட்டு போவாங்களா அவங்கள பிடிச்சு அடிங்கடா என்று ரவுடித்தனமாக பேச அதை ஒருவர் வீடியோ எடுக்கிறார்.
அந்த நேரம் பார்த்து போலீஸ் வர அவரை அரெஸ்ட் பண்ணுகின்றனர். அந்தத் தேங்காய் வியாபாரி நந்தினி பார்த்து மிரட்டி விட்டு சொல்கிறார். குடும்பத்தினர் அனைவருக்கும் உண்மை தெரிய அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு நந்தினியின் முதலாளி வீட்டிற்கு ஒரு சாமியார் கலசத்துடன் வருகிறார். அவரை மரியாதையாக வரவேற்று பேசுகின்றார். வீட்டில் வேலை செய்யும் பெண் காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க காபியா இல்ல கழனி தண்ணியா என்று கேட்கிறார்.
வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை என்று போன் வர, சுந்தரவல்லி பிரச்சனையை தீர்த்து வைக்க செல்லப் போவதாக சொல்கிறார். கோபமாக சென்ற இடத்தில் அனைவரும் பூங்கொத்து மற்றும் மாலை போட்டு வரவேற்று சந்தோஷப்படுகின்றனர்.
வேலையாட்கள் அனைவரும் நாங்கள் 10% கேட்போம் ஆனால் நீங்க 20%பர்சன்டேஜா கொடுத்துட்டீங்க என்று சந்தோஷமாக பேசுகின்றனர். இதனால் கடுப்பான சுந்தரவல்லி இந்த முடிவை யார் எடுத்தது என்று கேட்க உங்க பையன் தான் என்று சொல்லுகிறார்கள்.
நேராக மகனிடம் சென்ற சுந்தரவல்லி யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்த என்று கேட்க யாரை கேட்கணும் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினியின் தாய்மாமன் குடும்பத்தினர் வந்து பெண் கேட்கின்றனர். ஆனால் நந்தினி சம்மதிக்கவில்லை. மறுபக்கம் சுந்தரவல்லி இவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கணும் ஒரு பொண்ணு வந்தாவது திருந்துவான் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.