தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் நந்தினி கையில் ஒரு பேப்பர் கிடைக்க, அதை எடுத்துப் பார்த்தால் அது தாலி அடமானம் வைத்த ரசீது என்று தெரிய வருகிறது. இது மட்டும் இல்லாமல் பெயர் செல்வராஜ் என்றும் ,ஊர் பாபநாசம் என்று போட்டுள்ளதால் நந்தினியும் அப்பாவும் அந்த நபரை தேடி வருகின்றனர்.
பேரை சொல்லி விசாரிக்க மரம் ஏறும் செல்வராஜா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகின்றனர். நந்தினிக்கு இன்னும் சந்தேகம் அதிகரிக்க இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று யோசிக்கின்றனர்.
செல்வராஜ் என்று கூப்பிட யாரும் வெளியே வராமல் இருக்க சிறிது நேரம் கழித்து அவரது மனைவி வெளியே வருகிறார், அவரைப் பற்றி விசாரிக்க உடனே அவரது மனைவி கண்கலங்கி அழுகிறார். ஏன் அழறீங்க என்று கேட்க, அவனை கல்யாணம் பண்ணிட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்ந்துகிட்டு இருக்கேன் குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு மறந்து வாங்க தாலியை கொடுத்தேன் ஆனா திரும்பி வரவே இல்லை என்று அழுகிறார்.
அவரைப் பற்றி விசாரிக்க எதுவும் தெரியாததால் குழந்தை அழுகும் சத்தம் கேட்கிறது நந்தினி குழந்தையின் காய்ச்சலை சரி செய்ய காசு கொடுத்து விடுகிறார். பிறகு அங்கிருந்து இருவரும் கிளம்பி பஸ்ஸில் வருகின்றனர்.
அந்த நேரம் பார்த்து தேங்காய் வியாபாரி போன் பண்ண நந்தினி ஃபோனை எடுக்காமல் இருக்கிறார் தொடர்ந்து மூன்று முறை போன் செய்தோம் போன் எடுக்காத நந்தினி வீட்டுக்கு வர அங்கு தேங்காய் வியாபாரி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஏமாத்திட்டு ஊர விட்டு போகலாம்னு பாக்குறீங்களா என்று கோபமாக பேசி என் பணத்தை இப்படி எடுத்து வைக்கணும் என்று கண்டிஷனாக பேசுகிறார்.
கடைசியாக ஒரு நாள் டைம் கேட்க இன்னும் 24 மணி நேரத்தில் பணத்தை எடுத்து வைக்க வேண்டும் என்று கரராக பேசிவிட்டு கிளம்பி விடுகிறார். நந்தினி அப்பா மாட்டை விக்க ஆளிடம் சொல்லி அனுப்ப அவர் ஒரு லட்சம் பணத்துடன் வந்து நிற்கிறார். ஆனால் நந்தினி வேண்டாம் என திருப்பி அனுப்பி விடுகிறார்.
தோப்பில் நின்று நடந்ததை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் நந்தினி, திரும்பவும் செல்வராஜுக்கு போன் போட தென்னை மர கிளையில் போன் அடிக்கிறது. மேலே ஏறி அதை எடுக்க பின் அந்த போனுக்கு ஒரு கால் வருகிறது.
அட்டன் பண்ண நந்தினி திருடின தேங்காய் எல்லாம் ஒரு இடத்தில் இருப்பதாக சொல்ல காலையில் சீக்கிரமாக போய் அந்த வேலையை முடிங்க என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட நந்தினி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது. இன்றைய ப்ரோமோவில் தேங்காய் வியாபாரி வந்து கேட்க தேங்காயை கொடுக்கிறேன் நீ வாங்க என்று கூட்டிப் போகிறார் நந்தினி. பிறகு அவரை போலீசில் பிடித்துக் கொடுக்கிறாள். பரபரப்பான திருப்பங்களுடன் மூன்று முடிச்சு சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.