தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாக்கியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அருமையாக அமைந்துள்ளது.
நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் தோப்பில் திருடர்கள் நுழைந்து தேங்காயை பறிக்க சத்தம் கேட்டு நந்தினி வெளியே வருகிறார். அவர் வந்த நேரம் பார்த்து திருடர்கள் மறைந்து கொள்ள திரும்பி சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் தேங்காய் வாங்கியவர் தேங்காய் வெட்ட ஆட்களுடன் வர ஒரு மரத்தில் கூட காய் இல்லாததை பார்த்து ஷாக் ஆகின்றன. பிறகு நந்தினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, ஒன்னு தேங்காய் வேணும் இல்ல என்னோட பணம் வேணும் எடுத்து வை என்று கோபமாக பேசுகிறார். நந்தினி ஒரு வாரம் டைம் கேட்க ஒரு வாரம் எல்லாம் கொடுக்க முடியாது இரண்டு நாள்தான் டைம் பணத்த எடுத்துவை இல்லைனா குடும்பத்தோட கூண்டுக்குள்ள உட்கார வைத்து விடுவேன் என்று மிரட்டி விட்டு செல்கிறார்.
குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்தில் இருக்க நந்தினி முதலில் அந்த வியாபாரியிடம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று பால் ஊற்றும் கடைக்காரர், நகை கடைகாரர், தெரிந்தவர்கள் என்று அனைவரிடமும் சென்று கடன் கேட்க யாரும் கொடுக்க மறுக்கின்றனர்.கருப்பசாமி கோவிலில் படுத்துக்கொண்டிருந்த நந்தினி அப்பா நந்தினியிடம் பணம் ரெடியா என்று கேட்க இல்ல என்று சொல்லுகிறார். பிறகு சாமியிடம் கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.
எல்லோரும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினியின் தங்கை உண்டியலை உடைத்து அதிலிருந்து காசு எடுத்து கொடுக்கிறார், இன்னொரு தங்கை காதில் இருக்கும் கம்மலை கழட்டி கொடுத்து இதை வைத்து எவ்வளவு காசு வருமோ அதை கொடுத்திருக்கா என்று சொல்லுகிறார். இதை யார் பண்ணானோ என்று தெரியவில்லை என்று அம்மாச்சி ஒரு பக்கம் திட்டிக் கொண்டிருக்கிறார்.
நந்தினி அப்பா ஓனரிடம் இந்த உண்மையை சொல்லிவிடலாம் என்று சொல்ல ஆனால் நந்தினி வேண்டாம் என்று மறுத்து விடுகிறார். பிறகு எல்லோரும் போய் தூங்குங்க என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து நந்தினியின் தோழி பணத்துடன் வந்து நந்தினி இடம் கொடுக்க பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார். நந்தினி தூக்கம் வராமல் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு தோப்பில் வந்து நிற்கிறார்.
இதைப் பார்த்து நந்தினி அப்பா கண் கலங்கி அவருக்கு ஆறுதல் சொல்கிறார். போலாமா என்று கூப்பிட நந்தினி நீங்க போங்க என கொஞ்ச நேரம் இருந்துட்டு வர என்று சொல்லுகிறார். ஒரு தென்னை மரத்தின் அடியில் உட்கார்ந்து கவலையில் இருக்கும் நந்தினிக்கு ஒரு பேப்பர் தெரிகிறது. அதனைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் நந்தினி. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் வீடு தேடி வந்து வியாபாரி மிரட்டி விட்டுப் போக, மானம் மரியாதை போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று சொல்லுகிறார் நந்தினியின் அப்பா.
மானம் மரியாதையை விட நம்மள நம்பி இருக்கிற உயிர்தான் முக்கியம் என்று நந்தினி சொல்ல போனில் தேங்காய் லோடு எங்கே இருக்கிறது என்று தெரிய வருகிறது.
இந்த பிரச்சனையை நந்தினி எப்படி சமாளிக்க போகிறார்? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.