புதிய சிக்கல் ஒன்றில் சிக்கி உள்ளார் நந்தினி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அருமையாக அமைந்துள்ளது.
நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் நந்தினி ஏர் ஒட்டிக் கொண்டிருக்கும்போது குறுக்கே வந்து விழுகிறார் தாய் மாமன் சிங்கப்பூர் தீபன். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வீர வசனம் எல்லாம் பேச, நந்தினி கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று தீர்த்து சொல்லி விடுகிறார்.
நந்தினியின் தோழி திருமணம் செய்ய ஏன் தள்ளிப் போட வேண்டும், பண்ணிக்கலாமே என்று கேட்க எனக்கு அம்மா கிடையாது எங்க அம்மா இருந்திருந்தால் என்னோட தங்கச்சிங்கள எப்படி பார்த்திருப்பார்களோ அது மாதிரி நானும் அவங்கள கரை சேர்த்துட்டு என்னையும் அப்பாவையும் நல்லா பாத்துகிட்டு வீட்டோட இருக்கிற மாப்பிள்ளையை கண்டிப்பாக கல்யாணம் பண்ணிக்குவேன் என்று நந்தினி சொல்ல அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் என்று தோழி கிண்டல் செய்கிறார்.
பிறகு பால் கறந்து அந்தப் பாலை கடைகளில் விற்று வந்த காசை தங்கைகளுக்காக நகை கடையில் சேமித்து வைக்கிறார் நந்தினி. தேங்காய் வெட்டும் ஆர்டரை தங்களுக்கு தருமாறு ஒருவர் வந்து கேட்க, நீங்க ரொம்ப கம்மியான விலைக்கு எடுக்குறீங்க என்றும் ஒரு தேங்காய் பன்னிரண்டு ரூபாய்க்கு எடுத்தீங்கன்னா கொடுக்கிறேன் என்று நந்தினி சொல்லுகிறார். அவரும் சம்மதிக்க இதற்கு முன் வாங்கியவரிடம் அனுமதி கேட்டு விட்டு இவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொள்கிறார்.
பிறகு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தோசை ஊற்றி கொடுக்க, அவரின் அப்பா இன்னொரு தோசை கேட்க அத்துடன் இருக்கும் மாவு எல்லாம் காலியாகிவிடுகிறது. நந்தினியின் தங்கை உனக்கு மாவு இல்லையே அக்கா பசியோட எப்படி இருப்ப என்று கேட்க கஞ்சி இருக்கு என்று நந்தினி சொல்ல இல்லை அது நான் சாயங்காலம் குடித்துவிட்டேன் என்று சொல்லுகிறார்.அப்பா கேட்டால் நீ மாவு இல்லை என்று சொல்ல மாட்டியா என்று கேட்க நமக்காக அப்பா எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்திருப்பாரு என்று சொல்லுகிறார். இதனைக் கேட்ட நந்தினி அப்பா கண்கலங்கி அழுகிறார்.
பிறகு அம்மாச்சி என் மகளை உன் உருவில் பார்க்கிறேன் என்று சொல்ல அனைவரும் தூங்கச் செல்கின்றன. நடுராத்திரியில் தேங்காய்களை திருட கூட்டமாக தோப்புக்குள் நுழைகின்றன.
தேங்காய் சத்தம் கேட்டு நந்தினி தோப்புக்குள் வந்து பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் தேங்காய்கள் திருடு போக அட்வான்ஸ் கொடுத்த நபர் பணம் திருப்பி வரலைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து குடும்பத்தையே தூக்கி உள்ள வச்சுருவேன் என்று சொல்லுகிறார்.
குடும்பத்தார் வீட்டில் இருக்கும் உண்டியலை உடைத்து பணத்தை எடுக்கின்றன. மறுபக்கம் நந்தினி இதை யார் செய்திருப்பார்கள்? என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.
பிறகு தோப்பிற்கு சென்ற நந்தினி கையில் ஒரு தடயம் சிக்குகிறது. அதனை வைத்து திருடனை கண்டுபிடிப்பாரா நந்தினி? சிக்கலில் இருந்து எப்படி வெளியே வர போகிறார்? இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.