தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுதாகரிடம் நந்தினி பேச என் மேல இருக்கிற கோபத்தை ஏன் அவர் மேல காமிக்கிறீங்க, கடைசியில கருப்பனோட கோபத்துக்கு ஆளாக போறீங்க, இந்த ஊர் பக்கமே வராத என்னோட முதலாளி அவரோட பையனுக்கு ஒரு நல்லது நடக்கணும் என்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்காரு ஆனா அவரோட பங்காளி நீங்க இப்படி பண்ணலாமா என்று கேட்கிறார். அதற்கு சுதாகர் எனக்கு அவர் மேல எந்த கோபமும் கிடையாது என்னோட கோபமும் உன் மேல தான் என்று சொல்ல அப்போ நீங்க என்னதான பழி வாங்கணும் என்று நந்தினி சொல்லுகிறார். அதற்கு சுதாகர் பூர்ண காப்பு பங்க்ஷன் நடக்கணும்னா நான் கேக்குறது நீ தரணும் தருவியா என்று கேட்கிறார். என்ன என்று நந்தினி கேட்க நந்தினி இடம் எதையோ சொல்கிறார் சுதாகர். நந்தினியும் அதற்கு சம்மதம் தெரிவித்து விடுகிறார்.
உடனே கோவிலுக்கு வந்த சுதாகர் நானும் யோசிச்சு பார்த்தேன் எவளோ ஒரு வேலைக்காரி செஞ்சதுக்காக நான் ஏன் என் பங்காளிய தண்டிக்கணும், பூஜையை ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி அவருக்கு நன்றி சொல்ல பூசாரி அவரா வரல கருப்பன்தான் அவரை வர வச்சிருக்கார் என்று சொல்லுகிறார்.
பூஜையை பூசாரி ஆரம்பிக்க அந்த நேரம் பார்த்து நந்தினி மற்றும் அவரது அப்பா ஓடிவர சுந்தரவல்லி அங்கேயே நில்லு ஒரு அடி எடுத்து வச்சாலும் அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். பிறகு பூஜை நடக்கும் நேரத்தில் நந்தினி சூர்யா சாருக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும் ஒரு நல்ல பொண்ணா அவருக்கு கிடைக்கணும் என்று பிரார்த்தனை செய்கிறார்.
பூஜை எல்லாம் முடிந்த பிறகு அனைவரும் ஊருக்கு கிளம்ப ரெடி ஆகின்றனர். அந்த நேரத்தில் நந்தினி பலகாரங்களை எடுத்து வந்து காரில் வைக்க அதை பார்த்த சுந்தரவல்லி இந்த வீட்ல செஞ்சத நாங்க சாப்பிடனுமா நாங்க இதெல்லாம் பார்த்ததே இல்லையா என்று கோபப்பட்டு மாதவிடாய் அதையெல்லாம் தூக்கி வெளியே வீசிவிடு என்று சொன்ன மாதவியும் தூக்கி எரிகிறார்.
உடனே சூர்யாவின் அப்பா வர மாதவி நந்தினி இடம் போய் எங்க அப்பா கிட்ட இருந்து பேக வாங்கிட்டு வந்து கார்ல வை என்று சொல்லுகிறார் அதற்கு சூர்யா வினோதினி வேணாம் நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என்று அவருடைய அப்பா கையில இருக்கும் பேகை வாங்கி அவர் எடுத்துக் கொண்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் தூக்கி எறிந்த தின்பண்டங்களை அவருடைய காரில் எடுத்து வைக்க சொல்லுகிறார்.
அதே சமயம் சுந்தரவல்லி போனுக்கு ஒரு வீடியோவை அனுப்புகிறார் சுதாகர். அதில் நந்தினி தேங்காய் திருடு போனதுக்கு நான்தான் காரணம் நான் தான் எல்லா தேங்காயும் திருடி வித்துட்டேன். அந்த பழியை அவர் மேல போட்டுட்ட என்னோட தங்கச்சி இங்க படிப்பு செலவுக்காக இப்படி பண்ணிட்டேன் என்று பேசும் வீடியோவை அனுப்பியுள்ளார் இதனைப் பார்த்த சுந்தரவல்லி எனக்கு அப்பவே தெரியும் இவ ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி இருப்பான்னு என்று சூர்யாவின் அப்பாவிடம் காட்டுகிறார்.
உடனே நந்தினி கூப்பிட்டு இங்க வாடி என்னடி இதெல்லாம் என்று கேட்கிறார். பிறகு நீயும் உன் குடும்பமும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்கக்கூடாது உங்கள நம்பி இவ்வளவு பெரிய தோப்பு வீட்டையும் இனிமேல் விட முடியாது என்று கோபமாக பேசுகிறார். அதற்கு நந்தினியின் அப்பா அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்கம்மா என்று சொல்ல சொன்னவ பக்கத்துல தானே இருக்கா அப்ப என்னன்னு கேளு என்று சொல்லுகிறார்.
உடனே சூர்யாவின் அப்பா நான் சொல்லுகிறேன் என்று நடந்த விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறார். சுதாகரிடம் பேச முதலில் சூர்யாவின் அப்பா தான் சென்றுள்ளார். நந்தினி அவரை தடுத்து உங்கள் காலடி இங்க எல்லாம் படக்கூடாது ஐயா நான் போய் பேசுற கண்டிப்பா நடக்கும் என்று அவரை அனுப்பிவிட்டு நந்தினி சுதாகர் வீட்டுக்கு வருகிறார்.ஆனால் சூர்யாவின் அப்பா திரும்பி போகாமல் நந்தினியின் பின்னால் தான் வருகிறார். அங்கே நடக்கும் அனைத்து விஷயங்களையும் சுதாகர் நந்தினி இடம் பேசியது அனைத்தையும் அருணாச்சலம் கேட்டு விடுகிறார்.
நடந்த விஷயங்களை சுந்தரவல்லி கேட்டு அதிர்ச்சியாகி நிற்கிறார். அவ வீடியோ எடுத்தான்னு தெரியும் ஆனால் இதுதான் பேசி எடுத்தானு எனக்கு கேட்கல அப்படியே கேட்டு இருந்தா நான் வீடியோவை எடுக்க விட்டிருக்க மாட்டேன். பூஜையே நடக்கல நாளும் பரவாயில்லை என்று விட்டிருப்பேன்.
நம்மளோட வேண்டுதலுக்காகவும் சுயமரியாதை கௌரவத்துக்காக நந்தினி அவங்க கால்ல விழாத குறையா கெஞ்சி அவளோட சுயமரியாதையை விட்டுக் கொடுத்து இப்படி பண்ணி இருக்கா இப்ப சொல்லு அவ இருக்கணுமா இல்ல போகணுமா என்று சொல்ல சுந்தரவல்லி வாயை மூடிக்கொண்டு காரில் ஏறி சென்று விடுகிறார்.
நடந்த விஷயங்களுக்கு நந்தினிடம் மன்னிப்பு கேட்ட அருணாச்சலம் எப்பயும் போல சந்தோஷமா இருமா என்று சொல்லிவிட கவலைப்படாமல் போங்க சார் அடுத்த வாட்டி வரும்போது சூர்யா சார் ஜோடியாக வருவாரு என்று சொல்ல உடனே சூர்யா மூடியோடு வருவேனே தவிர ஜோடியோட வரமாட்டேன் என்று பேசிவிட்டு அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு கிளம்புகிறார்
நந்தினி அப்பா இவ்வளவு விஷயம் நடந்திருக்கு ஏமா எதுவுமே சொல்லல என்று நந்தினி இடம் கேட்க முதலாளியோடு குடும்பம் ஒரு விஷயத்துக்காக இங்க வந்திருக்காங்க , நடக்காமல் போனா அவங்களோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் எனக்கு என்னோட மானம் மரியாதை பத்தி அந்த நேரத்துல தோணல ஆனா இப்ப பூர்ணம் காப்பு நடக்கணும் அது மட்டும் தான் தோணுச்சு இப்ப அவங்களோட முகத்துல எவ்வளவு சந்தோஷம் இருக்கு பாத்தீங்களா அது போதும் பா என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் பணக்கார பெண் ஒருவர் சூர்யாவின் புகைப்படத்தை பார்த்து இவனை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு வாழ்ந்தால் இவன மாதிரி ஒருத்தர் கூட தான் வாழனும் என்று சொல்லுகிறார். ஒரு பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ணா திருப்பி அடிக்க தெரியவில்லையா என்று சூர்யா கேட்கிறார்.
அந்த பெண்ணின் அப்பா சுந்தரவல்லி இடம் உங்களுக்கு தெரியுமே எனக்கு ஒரே ஒரு பொண்ணு இருக்கான்னு, எங்க வீட்டுப் பையனுக்கு வரன் தேடிக்கிட்டு இருக்கோம் முதல் முதல் உங்ககிட்டயே கேட்டிருப்பேனே என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.