தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி விஷம் கலந்த நபரை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். மறுபக்கம் ஜெயிலில் இருக்கும் மூவரும் என்ன நடந்து இருக்கும் என்று பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த போலீஸ் அந்த நகை கடைக்காரனை பாலில் விஷம் கலந்த காரணத்தால் கைது செய்து விசாரணைக்கு கூட்டிப் போகின்றனர். இதனால் கோபம் அடைந்த சுதாகர் அந்த நந்தினியா இல்ல இந்த சுதாகரா பார்க்கலாம் என்று கோபமாக பேசுகிறார்.
என்ன மாலினி அவங்களோட உயிரை தான் காப்பாத்திட்டீங்களே அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க என்று சூர்யா கேட்க, என்ன பிரச்சனை நானே கேட்கணும்னு நினைச்சேன் ஏற்கனவே உங்கள தோப்புல அட்டாக் பண்ண வந்தாங்க. அப்புறம் இப்போ பால்ல விஷயம் கலக்குறாங்க என்ன பிரச்சனை என்று கேட்க, ஆமா சார் ஒரு நகை கடைக்காரன நம்பி பணத்தை எல்லாம் கட்டணும் ஆனா அவன் ஏமாதிட்டு போக பாத்தான் அதை கண்டுபிடித்து அவனை போலீஸ்ல புடிச்சு கொடுத்தேன் அதுதான் பிரச்சனை என்று சொல்ல, நல்லவங்களா இருந்தாலே இந்த பிரச்சனை தான் என்று சொல்ல அதுக்காக எல்லாத்தையும் பாத்துக்கிட்டு என்னால ஒதுங்கி இருக்க முடியாது எங்க அப்பா என்ன அப்படி வளர்க்கள என்று நந்தினி சொல்லுகிறார். தப்பு பண்ணான்னு தெரிஞ்சும் அவன காப்பாத்தணும் நினைக்கிறீங்க இல்ல நீங்க ரொம்ப கிரேட் என்று சூர்யா பாராட்டுகிறார். பேசிக் கொண்டிருக்கும்போது கார் ஆஃப் ஆகி நிற்கிறது. என்னாச்சு என்று சூர்யா இறங்கி வந்து பார்க்கிறார். பேட்டரி லோவ் ஆயிடுச்சு இனி யாராச்சும் தள்ளுனா தான் முடியும் உங்களால முடியாது இருங்க யாராவது வராங்களா பார்க்கலாம் என்று சொல்கிறார்.
நந்தினி மாமா டீக்கடையில் பெரியவர்களுடன் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க அங்கு வந்த சூர்யா இவ காரை இல்லை புல்டோஜர் தள்ளுவான் என்று சொல்கிறார். பாஸ் என்று கூப்பிட அடி வாடி சக்காளத்தி நீயா என்று திரும்பி பார்க்கிறார். கார் பிரேக் டவுன் ஆகிவிட்டதாக கொஞ்சம் தள்ளிவிட கூப்பிடுகிறார். ஏண்டா என் ஆளு பிக்கப் பண்ணிட்டு வந்துட்டு என்னையே காரத்துல சொல்றியா இது கொடைக்கானலா இருந்தா காரோட உன்னை மலையிலிருந்து தள்ளிவிட்டு இருப்பேன் என்று மனசில் நினைக்கிறார். சரி வாங்க என்று கூட்டி செல்கிறார். சரி போய் தள்ளுங்க என்று நந்தினி சொல்ல உங்க வண்டியை தள்ள தான் எங்க அம்மா என்ன பெத்து போட்டாங்களா என்று சொல்லி நீங்க போய் தள்ளுங்க நான் ஸ்டார்ட் பண்றேன் என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் பண்ணுகிறார். வண்டியை ஸ்டார்ட் பண்ணி நிக்காமல் ஒட்டிக்கொண்டு சென்று விடுகிறார்.
உடனே நந்தினி மாஸ்க் போட்டுக் கொண்டிருக்கும் போதே சந்தேகம் இருந்தது வாங்க போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று கூப்பிட அதெல்லாம் வேணாம் மாலினி கொஞ்ச நேரம் வந்து உட்காருங்கள் என்று கூப்பிட என்ன சார் சொல்றீங்க என்று சொல்ல இது லேட்டஸ்ட் டெக்னாலஜி கார். மூணு கிலோ மீட்டருக்கு மேல போக முடியாது நம்ம போன்லயே இஞ்சின் ஆஃப் பண்ணிடலாம் என்று சொல்லி இன்ஜினை ஆஃப் செய்கின்றனர் நந்தினியின் மாமா வண்டியை விட்டு நம்ம போயிடலாம் நடந்து வரட்டும் அப்பதான் அறிவு வரும் என்று சொல்கிறார்.
உடனே குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு நந்தினி வீட்டு முன் வந்து இந்த வீட்டு பச்சைக்கிளிய சிட்டியில் இருந்து வந்த பருந்து கொத்தி கிட்டு போகப்போகுது என்று அம்மாச்சி இடம் சொல்கிறார். அதுக்குள்ளார அவங்க தாய் மாமாக்கு கட்டி வச்சிடுங்க என்று சொல்ல இது நந்தினிக்கு தெரிஞ்சா இரண்டாக கிழிச்சு தொங்கவிட்டுருவா என்று சொல்ல அங்கிருந்து கிளம்பி சூர்யாவின் வீட்டிற்கு வருகிறார்.
வீட்டின் அருகே வந்து நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று கூப்பிட சூர்யாவின் அம்மா அப்பா வெளியே வருகின்றனர். யார் இவன் என்று கேட்க ஊர் சைடுல இது மாதிரி குடுபுடுப்பு காரன் வரது வழக்கம்தான்மா என்று சொல்ல, பாசமாய் இருக்கிற அய்யாவுக்கும், கோவமா இருக்குற அம்மாவுக்கும் தாவணி போட்ட பொன்னால பிரச்சனை என்று சொல்ல இந்த ஆளுக்கு ஏதாவது கொடுத்து அனுப்புங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். மாதவி அரிசியும் காசும் கொண்டு வந்து கொடுக்க நந்தினி மாமா வாங்கி கொண்டு கிளம்பி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் எனக்கு லவ் வராது கல்யாணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று நந்தினி மாமாவிடம் சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா வேட்டி சட்டை மற்றும் துண்டு கட்டிக்கொண்டு விவசாயி போல் மாறி எல்லோரிடமும் செல்பி எடுத்துக் கொள்கிறார்.
நந்தினியை கூப்பிட்டு போட்டோ எடுக்க சொல்ல அந்த நேரம் பார்த்து சுந்தரவள்ளியும் சூர்யாவின் அப்பாவும் வந்து நிற்கின்றனர். நந்தினி இடமிருந்து போனை வாங்கி என்னடி இது என்ன நெனச்சுக்கிட்டு இருக்க என்று கோபமாக பேச நிறுத்துங்கமா என்று சொல்லுகிறார் சூர்யா. என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.