தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை சைக்கிளில் உட்கார வைத்து கூட்டிக் கொண்டு வர அதை சூர்யாவின் அம்மாவும் அப்பாவும் பார்த்து விடுகின்றனர். உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு ஒரு வேலைக்கார பொண்ணு பின்னாடி உக்கார வச்சுட்டு வரான் இதுக்கு அவன் ஊருக்கே போயிட்டு இருக்கலாம் என்று கோபப்பட சூர்யாவின் அப்பா திரும்பவும் கோபப்பட்டு அவனை ஊருக்கு அனுப்பிச்சு விடாதே, எதுவா இருந்தாலும் என்ன நடந்துச்சுன்னு அவங்க கிட்ட கேட்டுக்கலாம் பொறுமையா இரு என்று சொல்லி விட்டு செல்கிறார்.
மறுபக்கம் நந்தினியின் மாமா பம்பு செட்டில் புலி வேஷத்தை கலைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த அவருடைய அப்பா இவன் என்ன சொன்னாலும் திருந்த மாட்டான் அந்த பொண்ணு வேணாம்னு சொன்னா கேட்க மாட்டான், என்று சொல்ல அவரது மனைவி எந்த பொண்ணு என்று கேட்க அந்த நந்தினி தான் என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினியின் மாமா அப்படியெல்லாம் மறக்க முடியாது, தூக்கி போட முடியாது, என்று லவ் டயலாக் எல்லாம் பேசுகிறார்.
ஜெயிலில் இருக்கும் நகை கடைக்காரன்,போலீஸ் மற்றும் தேங்காய் வியாபாரி மூவரும் நந்தினியை ஏதாச்சு பண்ணனும் இதுவரை ஊருக்குள்ள சேர்த்து வைத்திருந்த மரியாதை எல்லாமே போயிடும் என்று திட்டம் போடுகின்றனர். உடனே நகைக்கடைக்காரன் பானைக்குள் ஒளித்து வைத்திருந்த போனை எடுத்து ஊர்காரர் ஒருவருக்கு போன் போட்டு நந்தினி விற்கும் பாலில் விஷத்தை கலக்க சொல்லுகிறார். இந்தத் திட்டம் பலிச்சா நந்தினி பக்கத்துல இருக்கிற லேடிஸ் ஜெயிலுக்கு வந்துருவா என்று மற்ற இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.
தோட்டத்தில் நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க சுந்தரவள்ளியும் அவரது கணவரும் வருகின்றனர். நீ எதுவும் நந்தினி கிட்ட கேட்காத நான் பேசிக்கொள்கிறேன் என்று சொல்கிறார். நந்தினி இடம் சூர்யா எங்க போயிருந்தான் என்று கேட்க அவர் சின்ன பசங்களோட மீன் புடிச்சுகிட்டு இருந்தாரு, அப்புறம் நான் சைக்கிள்லயே கூட்டிட்டு வந்துட்டேன் அப்புறமா ஒரு ஆள் அனுப்பி கார் எடுத்துக்கிட்டு வர சொன்னேன் என்று சொல்ல நான் போன் பண்ணா ஏம்மா எடுக்கல என்று சொல்ல சூர்யா செல்போன் வாங்கி சைலன்ட்ல போட்டாரு அதனால சொல்ல முடியல என்று நந்தினி சொல்லுகிறார். சுந்தரவல்லி இடம் இப்போ தெரியுதா யார் மேல தப்புன்னு என்று சூர்யாவின் அப்பா சொல்லுகிறார்.
நந்தினி ரஞ்சிதாவின் டீச்சருக்கு பால் கொடுக்கப் போக விஷத்தை கலக்க ஒரு நபர நந்தினி இன் பின்னாலே வருகிறார். நந்தினி ஒரு இடத்தில் சைக்கிளை வெளியே விட்டு விட்டு உள்ளே செல்ல அந்த நேரம் பார்த்து அந்த நபர் பாலில் விஷத்தை கலந்து விடுகிறார். உடனே நகைக்கடைக்காரர்களுக்கு அந்த நபர் போன் போட்டு விஷயத்தை கலந்து விட்டேன் அந்தப் பாலை குடித்தால் அரை மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க என்று சொல்ல அவர்கள் மூவரும் சந்தோஷப்பட்டு சிரிக்கின்றனர். நாளைக்கு பக்கத்து செல்ல நந்தினி கதறிக்கிட்டு இருப்பா என்று பேசுகின்றனர்.
நந்தினி டீச்சர் வீட்டுக்கு வந்து அந்தப் பாலை ஊற்றிக் கொடுக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினியின் சைக்கிள் பாலுடன் கீழே விழுந்துவிட அங்கே வந்த ஒருவர் பாலில் இருக்கும் மாத்திரையை பார்த்து இது காட்டுல இருக்குற வண்டுக்கு வைக்கிற விஷம் மாத்திரை இது எப்படி பால்ல என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைகிறார்.
கடைசியில் விஷம் கலந்த நபரை அந்த பாலை குடித்துக் கொண்டிருக்கும் நந்தினி தட்டி விடுகிறார். அந்த நபர் நந்தினி இடம் அந்த பாலில் விஷயத்தை கலந்ததே நான்தான் என்று சொல்லி மயங்கி விழுகிறார்.
இதெல்லாம் யார் பண்ணி இருப்பாங்க என்று சூர்யா கேட்க ,எல்லாம் அந்த மூணு பேரோட வேலையா தான் இருக்கும் சார் என்று சொல்லுகிறார். இவங்களெல்லாம் விடவே கூடாது சூர்யா சார் என்று சொல்லுகிறார். பரபரப்பான திருப்பங்களுடன் மூன்று முடிச்சு சீரியலில் நடக்கப்போவது என்ன என்று இன்றிய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.