தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா மீன் சுட்டு சாப்பிட எல்லா ஏற்பாடுகளையும் செய்ய, நந்தினி விறகுகளை எடுத்து வந்து கொடுக்கிறார். உடனே பசங்க தேவையான மசாலா பொருட்களை எடுத்துக் கொண்டு வர மீனை சுட ஆரம்பிக்கின்றனர். அந்த நேரம் பார்த்து நந்தினி என் மாமா இதை பார்க்க டென்ஷன் ஆகிறார். என் மாமா பொண்ண கரெக்ட் பண்ண பாக்குறியா இருடா கத்துக்கிட்ட வித்தை எல்லாம் இறக்குறேன் என்று செல்கிறார்.
மீன் சுட்டு முடித்தவுடன் நந்தினி பசங்களுக்கு கட் பண்ணி கொடுக்க சூர்யாவிற்கும் கட் பண்ணி கொடுக்க சூர்யா செம டேஸ்டா இருக்கு என்று சொல்லுகிறார். நீங்களும் சாப்பிடுங்க என்று கொடுக்க நந்தினி சாப்பிடுகிறார். ஆனால் ஏதோ ஒன்று மிஸ் ஆகுது என்று ஓடிவந்து காருக்குள் இருக்கும் சரக்கு பாட்டிலை எடுத்து குடிக்கிறார்.
நெனச்ச இத தான் பண்ணுவீங்கன்னு என்று நந்தினி சொல்ல இது என்னோட பெஸ்ட் பிரண்ட் என்று சொல்லுகிறார். மேலும் இந்த இடம் இந்த மீன் நீங்க எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்லி, சூர்யா அதிகமாக குடித்து விட்டு காரை எடுக்கப் போக நந்தினி இந்த நிலைமையில கார்ல வேண்டாம் நடந்து போகலாம் என்று கூப்பிட,மின்மினி சொன்னா கேட்காம இருப்பேனா? நந்தினி சார் என்று சொல்ல ஓகே ஓகே என்று சொல்லுகிறார் சூர்யா.
சைக்கிளை தள்ளிக் கொண்டு வர நந்தினியிடம் நான் கீர் போட்டு நல்லா ஓட்டுவேன் என்று சொல்ல இது சைக்கிள் சார் என்று சொல்ல இதுவும் நல்லா ஓட்டுவேன் என்று சொல்கிறார். இப்போ உங்களுக்கு என்ன கையில இருக்கிற பாட்டில் தானே பிரச்சனை என்று சரக்கு பாட்டலை தூக்கி போட்டு உடைக்கிறார். நீங்க உட்காருங்க நான் ஓட்டுறேன் என்று நந்தினி உட்கார வைத்து சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார்.
எதிரில் புலி வேஷத்தில் வந்த நந்தினி மாமாவை பார்த்து சூர்யா பயப்பட, நந்தினி புலி இல்ல சார் புலி வேஷம் யாரோ போட்டு இருக்காங்க என்று கூறுகிறார்.
உடனே திரும்பிய நந்தினி மாமா,ஏன்டா டவுன்கார டவுசரு என்ன தைரியம் இருந்தா, எங்க ஊரு பொண்ணு கரெக்ட் பண்ணி டேட்டிங் போவ என்று சொல்லி சூர்யாவை சண்டைக்கு கூப்பிடுகிறார். அசரா புலி ,அடங்காத புள்ளி என்று டயலாக் எல்லாம் பேசி கம்பு சுத்த நந்தினி சூர்யாவிடம் இருந்து கம்பை வாங்கி அடித்து ஓட விடுகிறார்.
சூர்யா நந்தினி இடம் இருக்கும் கம்பை வாங்கி நானும் இது மாதிரி சுத்தணும் அப்பதான் வருவேன் என்று சொல்லி அவரும் சிலம்பம் சுத்துகிறார். மறுபடியும் இருவரும் சைக்கிளில் கிளம்ப சுந்தரவல்லி பார்த்து விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நீயா முடிவுக்கு வர பழக்கத்தை முதல்ல மாத்து என்று சூர்யாவின் அப்பா சொல்ல நீங்க முதல்ல என்ன குறை சொல்றது நிறுத்துங்க என்று சொல்லுகிறார் சுந்தர வள்ளி.
இன்னும் இரண்டு நாட்களில் நந்தினி லேடிஸ் ஜெயிலுக்கு வருவாள் என பேசிக்கொள்கின்றன.
சூர்யாவின் அப்பாவிடம் என்னுடைய போனை சைலன்டில் போட்டு அவரே வச்சுக்கிட்டாரு என்று சொல்ல எல்லாம் அவன் தான் பண்ணிருக்கான் என்று சுந்தர வள்ளியிடம் சொல்லுகிறார்.
நந்தினியை போலீசில் சிக்க வைக்க என்ன செய்யப் போகிறார்கள்? சுந்தர வள்ளியை எப்படி சமாளிக்க போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.