தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினியும் சூர்யாவும் மீன்சுட்டு பசங்களுடன் சாப்பிடுகின்றனர். நந்தினியின் மாமா புலி வேஷம் போட்டு எதிரில் வந்து நிற்கிறார்.
உங்க கூட வர்றப்ப யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க என்று சூர்யாவுடன் சைக்கிளில் வந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுந்தர வள்ளி வந்து நிற்கிறார்.
பரபரப்பான திருப்பங்களுடன் மூன்று முடிச்சு சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.