தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி தென்னை மரத்தில் பாலை வந்திருப்பதால் அதற்கு பூஜை ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து சூர்யாவின் அப்பாவும் சுரேகாவும் வருகின்றன. இங்க எதுக்குப்பா கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்க நீ சிட்டில இருந்த இங்க சில பழக்கவழக்கங்கள் இருக்கு அது தெரிஞ்சுக்கோ என்று சொல்ல நந்தினி இருக்கும் இடத்திற்கு கூட்டி வருகிறார். எதுக்கு மரத்துக்கு பொட்டெல்லாம் வச்சிருக்கீங்க என்று கேட்க தென்னை மரம் வளர்க்கிறவங்க அவங்க புள்ள மாதிரி மரத்தைப் பார்த்துப்பாங்க என்று சொல்ல சூர்யாவின் அப்பா பூஜை செய்து தீபாரதனை காட்டுகிறார்.
கோபமாக அங்கே வந்த சுந்தரவல்லி வீட்ல என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியாதா?இங்கே வந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க என்னாச்சு என்று சூர்யாவின் அப்பா கேட்கிறார். அதற்கு மாதவி சூர்யாவை காலைல இருந்து பார்த்தீர்களா? அவனை எங்கேயுமே காணோம் என்று சொல்லுகிறார். அவன் ரூம்லயும் துணி எதுவுமே காணோம் ஊருக்கு போயிட்டானா என்று தெரியவில்லை என்று சொல்ல சூர்யாவின் அப்பா நான் போன் பண்றேன் என்று எடுக்க போன் சுவிட்ச் ஆஃப் பில் இருக்கிறது. பிறகு நந்தினி நான் குளக்கரையில் பார்க்கிறேன் என்று கிளம்ப ஆளுக்கு ஒருவராக கிளம்புகின்றனர்.
குளக்கரையில் வந்து பார்த்தால் சூர்யா பசங்களுடன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார். அங்கே வந்த நந்தினி என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க நீங்க ஊருக்கு போயிட்டதா நினைச்சு அங்க குடும்பத்துல எல்லாரும் பதட்டமா இருக்காங்க நீங்க இங்க உட்கார்ந்துட்டு இருக்கீங்க போன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்ல என்று சொல்ல, பதற்றமானர்களா தேடட்டும் நல்லா தேடட்டும் அதுவும் எங்க அம்மா தாய்க்குலம் எல்லாம் தேடி அலையட்டும். என்று சொல்லுகிறார். ஒரு சின்ன பொண்ணு நகைய பார்த்து ஆசைப்பட்டு கழுத்துல போட்டு பார்த்து இருக்கு அதுக்கு திருட்டுறாங்க சொல்லி முட்டி போட சொல்லி பனிஷ்மென்ட் கொடுக்குறாங்க என்ன ஜென்மங்கள் அதெல்லாம் என்று கோபப்படுகிறார். நான் பசங்களோட மீன் புடிச்சிட்டு நல்ல மூட்ல இருந்தேன் நீ அவங்கள பத்தி பேசி என்ன டென்ஷன் ஆக்கிட்ட என்று சொல்ல சரி நீங்க இங்க இருக்கீங்கன்னு நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன் என்று நந்தினி போனை எடுக்க சூர்யா போனை வாங்கி சைலன்டில் போடுகிறார்.
நல்லா தேடி அலையட்டும் சாய்ந்தரம் எப்படியோ வீட்டுக்கு தான் போக போறேன் அதுவரைக்கும் தேடட்டும் என்று சூர்யா மீன்பிடிக்க நந்தினி கூப்பிடுகிறார். அதற்கு நந்தினி தூண்டில் இந்த மீன்கள் சிக்காது. மூங்கில் கூடையில் தான் பிடிக்க வேண்டும் என்று சொல்ல ஒரு பையன் நான் போய் மூங்கில் கூட எடுத்துட்டு வரேன் என்று ஓடுகிறான்.
மூங்கில் கூடையை எடுத்துக் கொண்டு வந்து நந்தினி மீன் பிடிக்கப் போக சூர்யா நான் பிடிக்கிறேன் என்று கூடையை வாங்கி தண்ணீரில் இறங்குகிறார்.முதலில் சிக்காத மீன் இரண்டாவது முறை சிக்குகிறது. அனைவரும் கைத்தட்டி சந்தோஷப்படுகின்றனர்.
சுந்தரவள்ளியும் அவரது கணவரும் காரில் வந்து இறங்கி ஊர் புல்லா தேடியாச்சு எங்க தான் போயிருக்கான் என்று தெரியவில்லை என்று சுந்தரவல்லி கோபப்பட, அவன் போனதுக்கு உன்னோட இந்த கோபம் தான் காரணம் என்று சொல்லுகிறார். தோப்புல நீ அவன் கிட்ட எதுக்கு கோபப்படுற அது மட்டும் இல்லாம அந்த பொண்ணு திருடி இருக்குமா ஆனா உன் பொண்ணுங்க திருட்டுப்பழி போட்டு முட்டி போட வெச்சிருந்தாங்க அதை பார்க்கும்போது என் மனசே பதறிடுச்சு ஆனா ஒரு பெத்த தாயாக நீ அந்த பொண்ணுங்கள கண்டிக்கல என்று சொல்லுகிறார். திருட வந்தவளே வாழை இலை போட்டு கவனிக்க சொல்றீங்களா என்று மீண்டும் கோபப்படுகிறார். எவ்வளவு சொல்லியும் கேட்காத சுந்தர வள்ளியால் சூர்யாவின் அப்பா கடுப்பாகி சென்று விடுகிறார்.
மீனைப் பிடித்து வந்து சூர்யா என்ன பண்ணலாம் என்று கேட்க நான் வீட்ல சூப்பரா குழம்பு வச்சு கொடுக்கிறேன் என்று நந்தினி சொல்லுகிறார். அங்கு இருக்கும் பசங்க வேணாம் அக்கா மீனை சுட்டு சாப்பிடலாம் என்று சொல்ல அப்படின்னா என்ன என்று சூர்யா கேட்கிறார் உங்க ஊர்ல கிரில் சிக்கன் சாப்பிடுவீங்க இல்ல அது மாதிரி என்று சொல்ல உடனே சூர்யா எனக்கும் அதே மாதிரி வேணும் கேட்கும்போதே செமையா இருக்கு என்று சொல்லுகிறார். உடனே நந்தினி ரொம்ப நேரம் ஆயிடுச்சு சார் வீட்டுக்கு போய் செஞ்சு தரேன் என்று சொல்ல இங்கேயே செய்து இப்பவே செய்யணும் என்று சூர்யா சொல்லுகிறார் அதற்கு பாத்திரம் மசாலா எல்லாம் தேவை என்று சொல்ல அந்த பசங்க நாங்க எடுத்துக்கொண்டு வருவோம் என்று சொல்லி ஓடி விடுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ஏற்கனவே என்னால கல்யாண விஷயத்த சொல்லி ஒரு பிரளயமே வெடிச்சு போச்சு, சூர்யா சார கானோனு எல்லாரும் தேடிக்கிட்டு இருக்காங்க ஆனா இவரு ஜாலியா மீன் புடிச்சுகிட்டு இருக்காரு, அவங்க பாக்குறதுக்குள்ள இவரு எப்படியாவது வீட்டில் போய் கூட்டிக்கொண்டு விடனும் என்று நந்தினி முடிவு செய்கிறார்.
சூர்யாவும் ,நந்தினியும் சைக்கிளில் வர சுந்தரவல்லி எதிரில் வந்து நிற்கிறார். பரபரப்பான திருப்பங்களுடன் நாளை என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.