தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சுதாகர் ஏமாற்றிய விஷயத்தையும் அதற்காக அவரை போலீசில் பிடித்துக் கொடுத்த விஷயத்தை முழுவதையும் சொல்லிவிடுகிறார். ஆனால் சுந்தரவல்லி யாரைக் கேட்டு இந்த முடிவு எல்லாம் எடுக்கிற எங்க கிட்ட கேட்க மாட்டியா என்று கேட்க சூர்யாவின் அப்பா அவ மேல எந்த தப்பும் கிடையாது நான் இருந்திருந்தாலும் அததான் பண்ணி இருப்பேன் என்று சமாதானம் படுத்துகிறார். பிறகு எத்தனை நாளா நாங்க இல்லாம அதை இப்படி பண்ணீங்களோ அதே மாதிரி சுதாகர் இல்லாமல் பண்ணுங்க என்று சொல்லி விடுகிறார். ஆனால் சுந்தரவல்லி இதுல ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது என்று சொல்லுகிறார்.
நந்தினி வீட்டுக்கு கிளம்ப அந்த நேரம் பார்த்து சூர்யா கூப்பிடுகிறார். அவருக்கு சைடிஷ் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்த நந்தினி நான் கிளம்புறேன் என்று சொல்ல, இரு இரு ஏன் கிளம்புற கம்பெனி குடு என்று நிற்க வைக்கிறார். இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லுகிறார். ஆனா இங்க எனக்கு புடிக்காத விஷயம் ஒன்னு தான் அதுவும் எங்க அம்மானு ஒரு கேரக்டர் இருக்கே, தலை முதல் கால் வரை அந்தஸ்து அந்தஸ்து அந்தஸ்து மட்டும் தான், திமிரு பணம் தவிர அந்த அம்மாக்கு வேற எதுவும் தெரியாது. காசு பணம் மட்டும் தான் முக்கியமா நினைக்கிறாங்க பாஸ் எல்லாம் உங்களுக்கு முக்கியம் கிடையாது என்று அவங்க அம்மாவை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார்.
ரொம்ப நாள் கழிச்சு மூணு வேலை இன்னைக்கு தான் சாப்பிட்டு இருக்கேன் தேங்க்ஸ் மோகினி என்று சொல்ல நந்தினி என்று அவரே மாற்றிக் கொள்கிறார்.
ஆனா எங்க அப்பா மட்டும் இல்லனா எப்போ பைத்தியம் புடிச்சிருக்குமென்று அப்பாவை பற்றி பெருமையாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்ட நந்தினி நான் கீழே போறேன் சார் நீங்க போய் படுத்து தூங்கு என்று சொல்ல நான் பேசிய பேச்சுல நீங்க போதையா இருப்பீங்க பத்திரமா போங்க என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு மாதவியின் கணவர் அம்மாச்சியிடம் பேஸ்ட் கேட்க பொட்டிக் கடை காரனுக்கு இரண்டு பொண்டாட்டிய லேட்டா தான் திறப்பான் என்று சொல்லுகிறார்.உங்களுக்கு என்ன பல்லு வலக்கணும் அவ்வளவு தானா என்று வேப்ப குச்சியை எடுத்து வந்து கொடுக்க அவர் கசப்பாக இருக்கு என்று சொல்லுகிறார். வேப்ப குச்சி கசக்காமா எப்படி இருக்கும் என்று வாங்கி அவரது வாயில் நன்றாக வைத்து தேய்த்து விடுகிறார்.அவருக்கு வாயில் ரத்தம் வர என்னப்பா உனக்கு எட்சில் சிவப்பா இருக்கு என்று கேட்க,அது இரத்தம் என்று சொல்லுகிறார்.மாதவி காலைல வெத்தலை பாக்கு போட்டு இருக்கீங்க என்று கேட்க,சுரேகா ஜாம் சாப்டிங்களா? என்று கேட்கின்றன.மாதவி அம்மாச்சியிடம் ஏன் இப்படி பண்ண என்று கேட்டு கோபப்படுகிறார். நந்தியின் தங்கை சாப்பிடாமல் காலேஜ் கிளம்ப இரு சாப்பிட்டு போவ என்று நந்தினி சொல்ல,இல்லக்கா காலேஜ்ல போய் பாத்துக்கிறேன். நீ என்ன ட்ராப் பன்றியா என்று கேட்க இல்லபா எனக்கு வேலை இருக்கு என்று சொல்ல கிளம்பி விடுகிறார்.சுரேகா pedicure பன்ன மாதவியை கூப்பிட முடியாது என்று சொல்லி விடுகிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சூர்யாவிடம் நந்தினி உங்க கல்யாணத்துக்காக தான் இப்படி என்று ஆரம்பிக்க சூர்யா சுந்தரவல்லியை வெறுப்பேற்ற டிராக்டரில் வருகிறார். நான்கு ரவுடிகள் நந்தினியை கை ஓங்க சூர்யா தடுக்கிறார். பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.