தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலையும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நந்தினி மீன் வறுத்துக் கொண்டிருக்க அம்மாச்சி எனக்கு ஒரு துண்டு கொடு என்று கொடுக்க உனக்கு கஞ்சி இருக்கு பாரு அது போய் குடி அவங்க சாப்பிட்டு மிச்சமா இருந்தா சாப்பிடு என்று கஞ்சி கொடுத்து விடுகிறார். மீன் வாசனையை வைத்து சூர்யா வந்து மீனை கேட்க நந்தினி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால் சூர்யா கிணத்தில் பாட்டி வைத்திருந்த கஞ்சியை பார்த்து இதுதான் எனக்கு வேணும் பாட்டி நம்ம எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கலாமா என்று கேட்க அம்மாச்சி உடனே ஓகே என்று சொல்லுகிறார். கஞ்சியை சாப்பிட்டு சூரியா சூப்பரா இருக்கு இதையா எனக்கு கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க மோகினி என்று சொல்லுகிறார். அதற்கு என் பேரு மோகினி இல்ல நந்தினி என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் தென்னை தோப்பிற்கு நடுவில் டைனிங் டேபிள் போட்டு விருந்து ரெடி பண்ண மாதவி மற்றும் சுரேகா இந்த செட்டப் செம்மையா இருக்கு ஒரு கட்டு கட்ட வேண்டியதுதான் என்று சொல்லுகின்றனர். சுந்தரவல்லி சூர்யா எங்கே என்று கேட்க ரஞ்சிதா எங்க வீட்ல தான் கஞ்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகிறார். சுரேகா கஞ்சி போய் எப்படி சாப்பிடுவது இங்க வந்து டீசன்ட் இல்லாம நடந்துக்கிறான் என்று சொல்ல, சுந்தரவல்லி மானத்தை வாங்குறதுக்கே இப்படி பண்றானா இப்பவே நான் போய் கூட்டிட்டு வரேன் என்று கிளம்ப சூர்யாவின் அப்பா நான் போய் கூட்டிட்டு வரேன் நீ உட்காரு என்று சொல்லுகிறார்.
சூர்யா கஞ்சி கிண்ணத்துடன் வர சுந்தரவல்லி இன்னும் கடுப்பாகிறார். யாரைக் கேட்டு நீங்க அவனை கூப்பிட்டு போனீங்க அவன் யார் தெரியுமா? அவன் பேர்ல எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா? இந்த கஞ்சி எல்லாம் குடிக்கணும்னு அவனுக்கு என்ன தலை எழுத்து என்று நந்தினி குடும்பத்தை திட்டுகிறார். நாங்க கூப்பிடல அவரே தான் வந்தாரு என்று நந்தினி சொல்ல அவன் வந்த உங்களுக்கு எங்க போச்சு, என்று திட்டிக் கொண்டிருக்க சூர்யாவின் அப்பா அவன் உன்ன வெறுப்பேத்துவதற்காக தான் இப்படி பண்ணிட்டு இருக்கான் நீ இன்னும் கத்திட்டு இருந்தா அவன் ரொம்ப பண்ணுமா நீ சாப்பிடு என்று சொல்ல அனைவரும் சாப்பிட்டு எழுந்து சென்று விடுகின்றனர்.
சூர்யாவின் அப்பா சூர்யாவை கூப்பிட்டு இது நம்மளோட தோப்பு தான் ஆனால் நம்ம கிராமத்துக்கு வந்து இருக்கோம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ என்று சொல்ல நான் என்ன தப்பு பண்ணேன் என்று சூர்யா கேட்கிறார். நீ தப்பு பண்ணனு சொல்லல வசதியா இருக்கிறவங்க இங்க வந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க என்று கிராமத்துல பேசுவாங்க அதனால சொல்றேன் என்று சொல்ல அதை நீங்கள் உங்கள் பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி வர நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இரு நம்ப அவனுடன் நல்லது நடத்துவதற்காக தான் குலதெய்வ கோயிலுக்கு வந்திருக்கும் அது வரையும் கொஞ்சம் பொறுமையா இரு என்று சொல்லி அட்வைஸ் கொடுக்கிறார்.
சுந்தரவள்ளியும் அவரது கணவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க நந்தினி நோட்டுடன் வந்து கணக்கு வழக்கு இதுல இருக்கு என்று கொடுக்கிறார். சுந்தரவல்லி இன் கணவர் அதெல்லாம் எதுக்குமா உங்க வார்த்தை மேல நம்பிக்கை இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க சுந்தரவல்லி என்ன இந்த வாட்டி அமௌன்ட் கம்மியா இருக்கு என்று சொல்ல புயலில் மரங்கள் சாய்ந்து விட்டதால் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சாமியார் வருகிறார்.
பூஜை எல்லாம் சிறப்பா பண்ணிடலாம் ஆனால் என்று தயங்க என்ன ஆச்சு என்று கேட்கிறார். நந்தினி நீ எதுவுமே சொல்லலையா என்று சாமியார் கேட்க தயங்கி நிற்கிறார் நந்தினி. என்னாச்சு எதுக்கு முழிக்கிற என்று கேட்க பிரச்சனை முடிஞ்சிருச்சு அதனால உங்க கிட்ட சொல்லல என்று சொல்லுகிறார். என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பிக்க இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் உண்மையை சொல்லு நந்தினி நான் செஞ்சதுல தப்பில்லையே என்று கேட்கிறார் அதற்கு சூர்யாவின் அப்பா உன் மேல எந்த தப்பும் இல்லம்மா என்று சொல்லுகிறார். ஆனால் சுந்தரவள்ளி நீயா ஒன்னு பண்ணிட்டு எங்க கிட்ட சாக்கு சொல்றியா நாளைக்கு பூரண காப்பு எப்படி பண்றது என்று கேட்கிறார்.
பிறகு சூர்யா ரொம்ப நாள் கழித்து மூணு வேலையும் சாப்பிட்டேன் தேங்க் யூ மாலினி என்று நந்தினியிடம் சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.