தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றும் மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் எல்லோரும் குடும்பமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து சூர்யாவின் அப்பா வந்து சூர்யா சாப்பிட்டானா என்று கேட்கிறார். அவ என்னைக்கு எல்லார்கூடயும் உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கான் என்று சுந்தரவள்ளி கேட்கிறார். நீங்க அவன சாப்பிட கூப்பிட்டீங்களா என்று கேள்வி கேட்க அதற்கு மாதவி மற்றும் அவரது தங்கையும் எந்த பார்ல இருக்காரோ தெரியல என்று சொல்லுகின்றனர். உடனே சுந்தரவள்ளி எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன என் மூஞ்ச பாத்தாலே எந்திரிச்சு போயிடுவான் என்று சொல்லி வருத்தப்பட்டு எழுந்து சென்று விடுகிறார்.
பிறகு சூர்யா போதையில் வீட்டுக்கு வர சூர்யாவின் அப்பா கூப்பிட்டு சாப்பாடு ஊட்டி விடுகிறார். நீ நல்லா இருக்கியா சூர்யா? இல்ல நீ நல்லாவே இல்ல பழைய மாதிரி கம்பீரமா இருக்குற எம்.டி சூர்யா மாதிரி இல்லையென்று சொல்லி வருத்தப்படுகிறார். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கல அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு ஆனால் தனிமையில் இருக்கிறது அதைவிட கொடுமையானது என்று கண்கலங்குகிறார். பிறகு நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ சூர்யா என்று சொல்ல அவர் எழுந்து சென்று விடுகிறார்.
குடும்பத்தினர் அனைவரும் ஜோசியரிடம் சூர்யா திருமணத்திற்கு சம்மதிக்காதது குறித்து கேட்டுக் கொண்டிருக்க அவர் குலதெய்வ கோவிலுக்கு எப்போ போனீங்க என்று கேட்கிறார் அதற்கு பத்து வருஷம் இருக்கும் என்று சூர்யாவின் அப்பா சொல்ல, அப்பா அம்மாவை பத்து வருஷம் பார்க்காம இருப்பீங்களா என்று கேட்கிறார் ஜோசியர். நீங்க குலதெய்வ கோயிலுக்கு போங்க உங்க மருமகளா அங்க உங்க குலதெய்வம் காண்பிக்கும் என்கிறார். அனைவரும் கிளம்பி கிராமத்துக்கு வர நந்தினி அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்.
சுந்தரவள்ளி நீங்க என்ன முதலாளிய? இல்ல வேலை செய்றவங்களா? பின்னாடியே வரீங்க, லக்கேஜ் எடுத்துக்கொண்டு உள்ள வாங்க என்று சொல்லுகிறார். பிறகு எல்லாத்தையும் குடும்பத்தினர் அனைவரும் எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வருகின்றனர்.
மறுபக்கம் நந்தினி மீன் வறுத்துக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா அங்கே வந்து நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் இந்த ஊருக்கு நம்ம முதல்ல எதுக்கு வந்தோம் அவனுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கணும் தானே ஆனால் அவன் எல்லாரையும் சேர்த்து வச்சு அசிங்கப்படுத்துவதற்கு இருக்கான் என்று கோபமாக பேசுகிறார் சுந்தரவள்ளி.
பிறகு தேங்காய் வியாபாரி பற்றி பேச நந்தினி நீ எதுமே இவங்க கிட்ட சொல்லலையா என்று ஒருவர் கேட்கிறார். இன்று என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.