தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நந்தினி மற்றும் அவருடைய அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து அடித்து விரட்டுகின்றனர். நந்தினி வீட்டுக்கு வந்து அவங்க அப்பாவிற்கு ஒத்தடம் கொடுக்கின்றனர். அம்மாச்சி நடந்ததைப் பற்றி கோபமாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நந்தினிக்கு ஒரு போன் கால் வருகிறது.
உடனே நந்தினி ஒரு ஆட்டோவில் சீட்டு கட்டியவர்களுக்கு நகையாக கொடுக்கப் போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் சீட்டு கடை வரவேண்டும் என்று விளம்பரப்படுத்தி வருகிறார். இவர் பேசியதை கேட்டு அனைவரும் கடையின் அருகே வந்து ஒன்றும் புரியாமல் நிற்கின்றனர். உடனே நந்தினி வர என்ன நந்தினி சொல்ற கடை பூட்டி இருக்கு எப்படி வருவான் என்று கேட்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வருவாங்க என்று சொன்னவுடன், நந்தினியின் அப்பா போலீஸ்காரருடன் இறங்கி வருகிறார். பூட்டை நந்தினியின் அப்பா திறக்க உள்ளே அந்த நகை கடைக்காரர் மற்றும் இன்ஸ்பெக்டர் இருக்கின்றனர். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக நிற்கின்றனர்.
பிறகு நடந்த உண்மையைப் பற்றி நந்தினி சொல்ல, கான்ஸ்டபிள் போன் பண்ணி நகை கடைக்காரனை இன்ஸ்பெக்டர் சந்திக்க போகும் விஷயத்தை சொல்கிறார் பிறகு நந்தினி கான்ஸ்டபிள் மற்றும் அவரது அப்பா மூவரும் சென்று அவர்களை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வந்து விடுகின்றனர்.
இந்த உண்மையை போலீஸிடம் சொன்ன அவர் நந்தினியை பாராட்டுகிறார். மேலும் நாளைக்கு இதே இடத்தில் வந்து நகைச் சீட்டை காட்டி அதற்கான நகையை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அதற்கு நான் உத்தரவாதம் என்றும் சொல்கிறார்.
மறுபக்கம் மாதவி சுந்தரவவள்ளியிடம் ஒரு புது டைமண்ட் ஷாப் ஓபன் பண்ணி இருக்காங்க என்று சொல்ல உடனே சுந்தரவள்ளி அதெல்லாம் தேவையில்லை அப்படின்னு சொல்லி வாயை அடக்குகிறார். சுந்தரவள்ளியின் கணவர் சூர்யா சாப்பிட்டானா? என்று கேட்க அனைவரும் அமைதியாக இருக்கின்றனர் இதை தொடர்ந்து எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் எங்க அம்மாவுக்கு வீட்டிலயும் சரி, ஆபீஸ்லயும் சரி எல்லா கஷ்டத்தையும் நான் மட்டும்தான் கொடுப்பேன் என்று சூர்யா சொல்ல, ஒரு சாமியார் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர சொல்கிறார். பிரச்சனையை சரி பண்ண கோவிலுக்கு போறீங்களா பிரச்சனையே நான் தான் என்று சொல்கிறார். இனிமேதான் ஆட்டமே என்று சொல்கிறார் சூர்யா.
ஊருக்கு வந்த குடும்பத்தினரை நந்தினி ஆரத்தி எடுத்து வரவேற்று முதலாளி குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்று பாருங்கள் என்று சொல்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.