தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி வீட்டிற்கு சூர்யாவை பார்க்க வந்த பணக்காரர் வருகிறார். உள்ளே வரவைத்து அவர்களுக்கு ஜூஸ் கொடுக்க அவர் இவ்வளவு பணம் இருந்தும் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. அதே மாதிரி தான் என் பொண்ணும் என்று சொல்ல சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது. மாப்பிள்ளையும் அது மாதிரி இருக்கணும் என்று தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என்று சொல்ல சூர்யாவின் அப்பா சூர்யாவை பத்தி விசாரிச்சிங்களா என்று கேட்க விசாரிச்சோம் எல்லாம் நல்லபடியா தான் சொன்னாங்க என்று சொல்கிறார்.
மறுபக்கம் சூர்யா பப்பில் குடித்துக் கொண்டு டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சூர்யாவின் மாமாவிற்கு ஃபோன் வர சூர்யா ரெண்டு நாளைக்கு வெளியே வர மாட்டான் என்று சொல்லி போனை வைக்கிறார். போன் பேசிக் கொண்டிருந்த நேரம் பார்த்து சூர்யா அவரது ஜூஸில் சாராயத்தை கலந்து விட அவர் முழுவதுமாக குடித்துவிட்டு மீண்டும் சரக்கு கேட்டு குடித்துவிட்டு மட்டை ஆகிவிடுகிறார்.
சுந்தர வள்ளியின் மகள் மாதவி ஒரு போனை எடுத்து வந்த பணக்காரருக்கு வீட்டுக்குள் இருந்தே போன் போட்டு முக்கியமான விஷயம் தள்ளி வாங்க என்று கூப்பிடுகிறார். வெளியே வந்ததும் சூர்யா பற்றிய உண்மையை சொல்லி விடுகின்றனர். ஆனால் அந்தப் பணக்கார அந்த உண்மையை நம்ப மறுக்கிறார்.
உள்ளே வந்த பணக்கார சுந்தரவல்லியிடம் உங்க பையன பத்தி தப்பு தப்பா சொல்லி போன் பண்றாங்க அதையெல்லாம் நான் நம்பல எனக்கு மாப்பிள்ளை அவர்தான் என்று சொல்கிறார்.
பிறகு இவர்கள் இருவரும் படித்த பொண்ணு வந்தாலே கேள்வி கேட்பார் இவ வேற பணக்கார பொண்ணு இவ என்ன எல்லாம் பண்ணுவா என்று பேசிக் கொள்கின்றன. இப்போ நான் என்ன பண்றேன் பாரு என்று சுரேகா மறுபடியும் அவருக்கு போன் செய்து நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம் ஆனா அவங்க பையன வர சொல்லி பாத்துட்டு அப்புறம் முடிவு பண்ணிக்கோங்க என்று கட் பண்ணி விடுகிறார்.
இவர் சுந்தரவல்லி இடம் சூர்யா இன்னும் வரலையா என்று கேட்க போன் பண்ணி பார்க்கிறேன் என்று சுந்தரவல்லி ஃபோன் பண்ணி சூர்யா கிளம்பி விட்டதாக இவரே பேசிவிட்டு பெங்களூர் போய்விட்டதாக பொய் சொல்லி சமாளித்து நாங்களே பெண் பார்க்க ஒரு நாள் வருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா காரில் வந்து இறங்குகிறார்.
இரண்டு பெண்களுடன் ஃபுல் போதையில் வந்து அவரை நக்கலாக பேச அவர் எழுந்து சென்று விடுகிறார். என்னடா இது என்று சூர்யாவிடம் கோபமாக கேட்க எல்லா புகழும் அம்மாவுக்கே என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் மாதவி ,சுரேகா மற்றும் மாதவியின் கணவர் மூவரும் சூர்யாவிற்கு கல்யாணம் என்ற ஒன்று நடக்கவே கூடாது நடக்காத வரைக்கும் தான் நம்ம இந்த வீட்டுக்கு ராணி இளவரசி அப்படி யாராவது ஒருத்தி வந்தா எல்லாத்துக்கும் கணக்கு கேட்பா,அத நம்ம நடக்கவே விடக்கூடாது என்று பேசிக் கொள்கின்றனர் அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வர மாதவியின் கணவரிடம் அவனை கொஞ்ச நேரம் அங்கேயே வச்சிருக்க வேண்டியது தானே எதுக்கு கூட்டி வந்த என்று சண்டை போட்டுவிட்டு கிளம்பி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினி ரஞ்சிதாவின் பங்க்ஷன்க்கு அவரது மாமாவை நேரில் சென்று அம்மா இடத்தில் நீங்க இருக்கணும் என்று சொல்லி தாம்பூல தட்டை கொடுக்க தட்டி எறிந்து விடுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி பொண்ணு மேலேயே கைய வைக்க எவ்வளவு தைரியம் இருக்கணும், என்று பேசிக் கொண்டிருக்க சூர்யா சுரேகாவை கூட்டிக்கொண்டு சொல்கிறார். நந்தினியின் தோழி உங்க மாமா இதுக்கு மேல வருவாரு என்று நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார். மாமா வருவாரா? சூர்யா சுரேகாவை எங்கே கூட்டி செல்கிறார்? இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.