தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நகைக் கடைக்காரன் ஏமாற்றி போனதை நினைத்து கண்கலங்கி அழுகிறார் நந்தினி. நம்பிக்கையானவன் என்று நம்பி ஏமாந்துவிட்டேன் என்று சொல்கிறார். குடும்பத்தினர் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அந்த நேரம் அம்மாச்சி நம்ம கருப்பசாமியிடம் போய் கேட்கலாம் என்று சொல்கிறார்.
அனைவரும் கோவிலுக்கு வர அங்கு கருப்பசாமி வாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர்கள் எதுவும் கேட்காமல் உட்கார்ந்து கொண்டிருக்க அவரே கூப்பிடுகிறார். பிறகு உன்ன சுத்தி பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதெல்லாம் விட பெரிசா ஒன்னு நடக்கப் போகுது அது உன் வாழ்க்கையே தலைகீழா மாத்திடும் என்று சொல்லுகிறார். தைரியமாக போனான் இருக்கிறேன் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் சூர்யாவிற்கு காலையில் காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அவர் காபியிலும் சரக்கு கலந்து குடிக்கிறார். பிறகு கிளம்பி வெளியே வந்த பிறகும் குடித்துவிட்டு வர ஏண்டா இப்படி எல்லாம் பண்ற காலையிலேயே என்று சூர்யாவின் அப்பா கேட்கிறார். கல்யாணம் பண்ணிக்கோ சூர்யா லைப் நல்லா இருக்கும். காலையில எழுந்துக்கும் போது மகாலட்சுமி மாறி இருக்குற பொண்டாட்டி கையால காபி குடிச்சா எப்படி இருக்கும் என்று சொல்ல, அதற்கு சூர்யா அம்மா உனக்கு பெட் காஃபி கொடுக்கிறாங்களா இல்ல நீ அவங்களுக்கு பெட் காஃபி கொடுக்கிறியா என்று கேட்டு ஆப் செய்கிறார். மீண்டும் திருமணம் பேச்சை எடுக்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார் சூர்யா.
சுந்தரவல்லி கணக்கு பார்த்துக் கொண்டிருக்க நகை அதிகமாக வாங்கியுள்ளதாக பெரிய மகளை கண்டிக்கிறார். அந்த நேரம் பார்த்து சின்ன மகள் சுரேகா வெளியே வர ஒரு நாளைக்கு உனக்கு 6000 ரூபா செலவு பண்ற, ஆனா நடுத்தர குடும்பத்துக்கு அது ஒரு மாத சம்பளம் என்று பேச ஆரம்பிக்க சுரேகா அவருக்கு ஐஸ் வைத்து விடுகிறார்.
சுந்தரவல்லிக்கு பெரிய இடத்திலிருந்து போன் வர எங்க பொண்ணு படிப்ப முடிச்சுட்டா அதான் உங்க வீட்ல பையன் இருக்கான்னு கேள்விப்பட்டோம் பேசலாமா என்று கேட்க தாராளமாக பேசலாம் வாங்க என்று கூப்பிட்டு வைக்கிறார். சூர்யா வீட்டிற்கு வராமல் தடுக்க சுந்தரவல்லி திட்டம் போடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினிக்கு ஸ்கூலில் இருந்து உன் தங்கச்சி என்ன பண்ணி இருக்கா தெரியுமா என்று கேட்டு ஒரு போன் வருகிறது. உடனே ஸ்கூலுக்கு வருமாறு கூப்பிடுகின்றனர். மறுபக்கம் சூர்யா வராமல் தடுக்க திட்டம் போய்க்கொண்டிருக்கின்றது.
நந்தினியின் தோழியின் கணவரை உன்ன நம்பி வந்த பொண்ண இப்படி பண்ணுவியா என்று கேட்கிறார். நடக்கப்போவது என்ன என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.