YouTube video

Mookuthi Amman Trailer Release Announcement : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஆர் ஜே-வாக வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. காமெடி நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

தன்னுடைய முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் நாயகியாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா அம்மனாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். படக்குழுவினரும் கொரானா தொல்லை எப்போது ஒழியும் என எதிர்பார்த்திருந்தனர்.

Mookuthi Amman Release Announcement

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் தீபாவளிக்கு வருகிறாள் என ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மனை தரிசிக்க அவரது ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான தமிழ் படங்கள் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி வந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.