Mookuthi Amman Release Update
Mookuthi Amman Release Update

மூக்குத்தி அம்மன் ரிலீஸ் குறித்து அப்படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி பேசியுள்ளார்.

Mookuthi Amman Release Update : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

நயன்தாரா அம்மனாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எதிர்பார்ப்பிற்கு இன்னொரு கூடுதல் காரணம் ஆர்ஜே பாலாஜி முதல் முறையாக படத்தை இயக்கி இருப்பதும் கூட சொல்லலாம்.

என்னை நம்பல அதனால நான் டாட்டா சொல்லிட்டேன்.. சிம்பு, பிரபுதேவா உடனான காதல் முறிவு குறித்து பேசிய நயன்தாரா.!

மாஸ்டர், சூரரைப்போற்று படங்களைப் போலவே இந்தப் படமும் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போய் வருகிறது.

இந்த நிலையில் இப்படம் OTT வழியாக வெளியிடப்படலாம் என தகவல் பரவி வந்த நிலையில் அது குறித்து ஆர் ஜே பாலாஜி பேசியுள்ளார்.

அதாவது மூக்குத்தி அம்மன் திரைப்படம் நிச்சயம் முதலில் தியேட்டர்களில் தான் வெளியாகி அதன் பிறகுதான் OTT வழியில் வெளியாகும் என கூறியுள்ளார்.