Mookuthi Amman Release Announcement

மூக்குத்தி அம்மன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குனரான ஆர் ஜே பாலாஜி.

Mookuthi Amman Release Announcement : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஆர் ஜே-வாக வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. காமெடி நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

தன்னுடைய முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் நாயகியாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா அம்மனாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். படக்குழுவினரும் கொரானா தொல்லை எப்போது ஒழியும் என எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் தீபாவளிக்கு வருகிறாள் என ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மனை தரிசிக்க அவரது ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான தமிழ் படங்கள் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி வந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் ரிலீஸாகும் என சொல்லிட்டு இப்போ OTTல ரிலிஸ் பண்றீங்களே. நயன்தாரா விரதமிருந்து எல்லாம் வேஸ்ட்டா போயிடுச்சே என வருத்தப்பட்டுள்ளார் இந்த ரசிகர்.

பங்காளி இதோட ரீமேக் தானே மூக்குத்தி அம்மன் படம் என சிவப்புக்கல் மூக்குத்தி படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இன்னொரு ரசிகர்.

என்னங்க நீங்க போங்க..
20 நாள்ல வருவேன் சொல்லிட்டு இன்னும் ஆளையே காணோம்…
உங்களுக்காக தான் ஐபிஎல் பாக்குறேன்… சீக்கிரம் வந்து thissara மந்திரம் போடு தலைவா அப்படியாச்சும் CSK ஒரு match ஆச்சு ஜெய்கட்டும் என கூறியுள்ளார் இன்னொரு ரசிகர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.