Mookuthi Amman Movie Memes
Mookuthi Amman Movie Memes

பூஜையறையில் நயன்தாரா புகைப்படம் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mookuthi Amman Movie Memes : தமிழ் சினிமாவின் தேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

விஜயுடன் பிகில் மற்றும் அஜீத்துடன் விசுவாசம் ரஜினியுடன் தர்பார் ஆகிய படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நாயகியை மையப்படுத்திய கதைகளிலும் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன்.

விஜய் பிறந்தநாளுக்கு தளபதி 65 அப்டேட் – கொண்டாட்டத்துக்கு தளபதி தயாராகும் ரசிகர்கள்..!

இந்த படத்தில் நயன்தாரா விரதமிருந்து அம்மனாக நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும் என ஆர்.ஜே பாலாஜி கூறி வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது நயன்தாரா அம்மன் படத்தில் இருக்கும் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து ரசிகர் ஒருவர் பூஜை செய்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.