Monster Tamil Movie Review | SJ Surya | Karunakaran | Priya Bhavani Shankar | Monster Review | Monster HD Movie | Monster Full Movie Review
Monster Movie Review

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர், கருணாகரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மான்ஸ்டர்.

Monster Tamil Movie Review : 

படத்தின் கதைக்களம் :

உலகில் எந்தவொரு உயிரை கொள்ள கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருபவர் எஸ்.ஜே சூர்யா. கருணாகரனுடன் சேர்ந்து சென்னையில் வேலை செய்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கருடன் நிச்சயதார்த்தம் ஆன பின்பு வீடு ஒன்றை வாங்கி குடியேறுகிறார். அந்த வீட்டில் எலி ஒன்று புகுந்து கொண்டு அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் எஸ்.ஜே சூர்யா அதை கொல்ல மனசு இல்லாமல் அதனை வேறு எங்கயாவது கொண்டு சென்று விட்டு விடலாம் என முடிவு செய்கிறார்.

அதன் பின்னர் ப்ரியா பவானி ஷங்கர் ஆசைப்பட்ட ஷோபாவை வாங்குகிறார் சூர்யா. ஆனால் அதையும் எலி விட்டு வைக்கவில்லை.

இதனால் எஸ்.ஜே சூர்யா ஆவேசப்பட்டு எலியை கொன்று விடலாம் என்ற முடிவிற்கு வந்து விடுகிறார். இறுதியில் என்ன நடந்தது? எலியின் நிலை என்ன என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

ஜெயித்ததா Mr. லோக்கல்? – விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கரின் நடிப்பு பிரமாதம்.

இசை :

ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

ஒளிப்பதிவு :

கோகுல் பினேயின் ஒளிப்பதிவு சிறப்பு

இயக்கம் :

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நம்மை ரசிக்க வைத்த நெல்சன் வெங்கடேசன் இந்த படத்திலும் அதனை முயற்சி செய்துள்ளார். கோடை காலத்திற்கு குழந்தை குடும்பம் என அனைவரும் ஒன்று சேர்ந்து பார்த்து ரசிக்க கூடிய அளவில் கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. எலி செய்யும் அட்டகாசங்கள்
2. எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கரின் நடிப்பு

REVIEW OVERVIEW
மான்ஸ்டர் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
monster-tamil-movie-reviewமொத்தத்தில் மான்ஸ்டர் எலி செய்யும் அட்டகாசத்திற்காக பார்க்கலாம்.