aruna
சென்னையை சேர்ந்த இளம்பெண்ணும், ஒரு நபரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னையை சேர்ந்த பல வாலிபர்களிடம் பண மோசடி செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Money fraud with youngsters young girl arrested – சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பானி சென்டர் 7வது தளத்தில் இ-ஜாப்ஸ் என்கிற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரூபன் சக்கரவர்த்தி. வெளிநாட்டில் வேலை வாங்கிதரப்படும் என இந்த அலுவலகத்தில் இருந்து அருணா என்கிற பெண் பல வாலிபர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பல மணி நேரம் லிப் லாக் முத்த காட்சியில் நடித்துள்ள இந்துஜா, கொடுத்து வச்ச ஹீரோ இவர் தான் – புகைப்படம் உள்ளே!

அவர்களை அலுவலகத்திற்கு வரவழைத்து ரு. 50 ஆயிரம் செலுத்தினால் வேலை எனக்கூறி வசூல் செய்துள்ளார். வேலைக்கான சான்றிதழையும் வழங்கியுள்ளனர். அருணாவின் அழகு மற்றும் பேச்சில் மயங்கிய பல வாலிபர்கள் பணத்தை கட்டியுள்ளனர். ஒரு மாதத்தில் விசா உங்கள் வீடு தேடி வரும் என வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், 20 நாட்களுக்கும் மேலாகியும் எந்த தொலைப்பேசி அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த வாலிபர்கள் அந்நிறுவனத்திற்கு சென்றனர். ஆனால், நிறுவனம் மூடப்பட்டிருந்தது. மேலும், ரூபன் சக்ரவர்த்தி மற்றும் அருணாவின் செல்போன் எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

Roopan Chakravarthy

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் அருணா கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான ரூபன் சக்ரவர்த்தி மற்றும் சில இடைத்தரகர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 46 பேரிடம் ரூ.26 லட்சம் வரை அவர்கள் மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.