Mom beats Baahubali 2 collection in China, Nerkonda Paarvai, Tamil Cinema News, Cinema Latest News, Bollywood Cinema News
Mom beats Baahubali 2 collection in China

Mom beats Baahubali 2 collection in China

சீனாவில் 38,500 திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தி உள்ளது. மேலும் சீனாவில் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளது

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேர்கொண்ட பார்வை ரிலீஸுக்கு முன்பே பண மழையில் நனையும் தயாரிப்பாளர்!

இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் இவருடைய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படம் கடந்த வாரம் சீனாவில் வெளியானது.

சீனாவில் 38,500 திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தி உள்ளது.

மேலும் சீனாவில் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளது இதைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படமும் சீனாவில் டப் செய்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.