Mohan G
திரௌபதி படத்திற்கும் அஜித்திற்கும் சம்மந்தம் இருப்பதாக பிரபல நாளிதழில் செய்தி வெளியாக அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் திரௌபதி இயக்குனர்.

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மச்சான், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி.

இந்த படம் ஜாதி ரீதியான பிரச்சனையை பேசும் படமாக உருவாகி இருப்பதால் பெரும் சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது. மேலும் இப்படத்திற்கு அஜித் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இன்னும் சர்ச்சையை அதிகமாக்கியது.

இந்த படத்திற்கும் அஜித்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என இயக்குனர் மோகன் ஜி கூறியும் மீண்டும் பிரபல பத்திரிகை ஒன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மோகன் ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்த கட்டுரையை எழுதியவருக்கு நானும் என் மகளும் கொடுக்கும் பரிசு இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.