Mohan G Reply to Fan
Mohan G Reply to Fan

ரசிகரின் பதிவால் கோபம் அடைந்த மோகன்ஜி வன்னியன் வளர்வது உங்களுக்கு பிடிக்கல என ஜாதி ரீதியாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Mohan G Reply to Fan : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய படங்களை இயக்கி இயக்குனர் ஆனவர் இயக்குனர் மோகன் ஜி.

இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தன்னை பாராட்டும் ரசிகருக்கு நன்றியும் விமர்சிக்கும் ரசிகருக்கு அதற்கான பதிலடியம் கொடுத்து வருகிறார்.

என்ன பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா? அஜித்தின் பிறந்த நாளுக்காக இளம் இயக்குனர் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ.!

இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் இரண்டு படம் எடுத்துவிட்டு இவன் தொல்ல தாங்கமுடியலை என்பதுபோல கருத்து கூற அதற்கு ஒரு பதிலடியை பதிவிட்டுள்ளார் மோகன்.

இந்தப்பதிவில் படம் எடுத்தா பேச கூடாதாடா.. எடுக்குறதுக்கு முன்னாடியும் இப்படிதான்டா பேசுனேன்.. வன்னியர் ஒருத்தன் வளர்ந்தா உங்களுக்கு எரிய தான்டா செய்யும்.. இன்னும் பலர் திரைத்துறையில் வளர தான்டா போறாங்க.. வயிறு எரிந்து கதறுங்கடா என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.