Mohan G Pay Respect to Sethu
Mohan G Pay Respect to Sethu

டாக்டர் சேதுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த மோகன் ஜியை ரசிகர் ஒருவர் கலாய்க்க அவரும் பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan G Pay Respect to Sethu : தமிழ் சினிமாவில் நடிகராகவும் டாக்டராகவும் வலம் வருபவர் சேதுராமன். இவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

வெறும் 36 வயதில் இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன்ஜி அவர்கள் சேதுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

கொரானாவால் இனிமே ஒரு உயிர் கூட போகக் கூடாது.. அதுக்கு நாம இத செஞ்சே ஆகணும் – யோகி பாபு வெளியிட்ட அதிரடி வீடியோ.!

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் அவரும் 1985, நீயும் 85 தான். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு மோகன்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவில் உன்னை மாதிரி சமூக எதிரிகளை அடக்கம் பண்ணிட்டு தான் போவேன்.. அடுத்த சம்பவம் தரமா வருவதற்கு உன்ன மாதிரி ஆளுங்களோட ட்வீட் தான் காரணமா இருக்க போகுது.. இன்னும் கதறுங்க.. என குறிப்பிட்டுள்ளார்.