பெண்களே நீங்கள் இவ்வளவு பலவீனமானவர்களா என திரௌபதி இயக்குனர் பதிவிட்டுள்ளார்.
Mohan G Comments on Kasi Kadhal : தமிழ் சினிமாவின் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.
பெரும் சர்ச்சையைக் கிளப்பி வசூலைப் பெற்ற இப்படம் நல்ல வசூலை பெற்றது.
இந்த படத்தில் கூறப்பட்டது போலவே நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் கிட்டத்தட்ட 100 பெண்களுக்கும் மேலாக ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடி உள்ளார்.
அதனை வீடியோவாகவும் பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். தற்போது இந்த இளைஞர் கையும் களவுமாக போலீசிடம் சிக்கி கம்பி எண்ணி வருகிறார்.
தற்போது இது குறித்து பெண்களே நீங்கள் இவ்வளவு பலவீனமானவர்களா? இந்த நாடக காதல் மன்னனை சட்டப்படி தூக்கில் போடுங்கள் என பதிவிட்டுள்ளார் மோகன் ஜி.
பெண்களே.. இவ்வளவு பலவீனமானவர்களா நீங்கள்.. இந்த மாதிரி வேடம் போடும் நாடக காதல் மன்னர்களை சட்டப்படி தூக்கில் இடுங்கள்.. pic.twitter.com/un0EN7QvrQ
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 27, 2020